என்பதனால் அகத்தியர்செய்த அகத்தியத்தினை முதனூலெனவும், அவர் வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமையுடையாரெனவும், அவராற் செய்யப்பட்ட முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோருள் தலைவராயினார் தொல்காப்பியனாரெனவும், பன்னிருபடலத்துப் 1புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப்பட்டது. இனி, பன்னிருபடலம் முதனூலாக வழிநூல் (வெண்பாமாலை) செய்த ஐயனாரிதனாரும் இது கூறினார்; என்னை? “மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த.” எனப் பாயிரஞ் செய்தற்கு 2உடன்பட்டமையினென்பது. இவற்றானெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம், அதுதானும் பனம்பாரனார், “வடவேங்கடம் தென்குமரி.” (பாயிரம்) எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ் செய்தமையிற் சகரர் வேள்விக்குதிரைநாடித் தொட்டகடலகத்துப் பட்டுக் 3குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையதென்பதூஉம், அவ் வழக்குநூல் 4ஈண்டுப் பற்றியல்லது மூன்று வகைச் சங்கத்தாருஞ் செய்யுட் செய்திலரென்பதூஉம், ஆசிரியரும் அவர்போல்வாரும் அவர்வழி ஆசிரியருஞ் செய்யுள்செய்த சான்றோருஞ் சொல்லாதன சொல்லப்படாவென்பதூஉம் அவருடம்படாதன சொல் உளவென்று எதிர்நூலென ஒருவன் பிற்காலத்து நூல் செய்யுமாயின் தமிழ் வழக்கமாகிய மரபினொடுந்
1. புனைந்துரைத்தல்--புகழ்ந்து கூறல். 2. உடன்படல்--சம்மதித்தல். தொல்காப்பியரை முதல்வரென்று கூறற்குச் சம்மதித்தல். 3. செய்யுளியல் முதற்சூத்திர உரையுள்ளு மிவ்வாறு கூறுவர். பனைநாடு--ஏழ்குறும்பனைநாடு. அவை குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்கு மிடையிலிருந்து கடல்கொண்டன. “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்” என்ற அடியின விரிவுரை நோக்குக. சிலப்பதிகாரம் வேனிற்காதை 1-ம் அடி. 4. ஈண்டு என்பது இங்கு வேண்டியதில்லைப்போலும். |