தமிழ் நூலொடும் மாறுபட நூல் செய்தானாகுமென்பதூஉம், இனித் தமிழ் நூலுள்ளுந் தமது மதத்துக்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துச் 1செய்துகாட்டினும் அவை முற்காலத்து இலவென்பது முற் கூறிவந்தவகையான் அறியப்படுமென்பதூஉம், 2பாட்டுந் தொகையும் அல்லாதன சில நாட்டிக்கொண்டு மற்றவையுஞ் சான்றோர் செய்யுளாயின; வழுவில் வழக்கமென்பார் உளராயின் இக்காலத்துள்ளும் ஒருசாரார்க்கல்லது அவர் சான்றோரெனப்படாரென்பதூஉம், இங்ஙனங் கட்டளைசெய்யவே காலந்தோறும் வேறுபடவந்த 3அழிவழக்கும் இழிசனர் வழக்கும் முதலாயினவற்றுக்கெல்லாம் நூல் செய்யின் இலக்கணமெல்லாம் எல்லைப்படாது இகந்தோடுமென்பதூஉம், இறந்தகாலத்து நூலெல்லாம் பிறந்தபிறந்த வழக்குப்பற்றிக் குன்றக்கூறல் என்னுங் குற்றந் தங்குமென்பதூஉம், ஒன்றாகப் புறனடுத்து ஒருசூத்திரமே செய்துபோத 4அமையினன்றி ஒழிந்த சூத்திரங்களெல்லாம் மிகையா மென்பதூஉமெல்லாம் படுமென்பது. (94) [வழி நூலாவது இதுவெனல்] | 650. | வழியெனப் படுவ ததன்வழித் தாகும். |
இது, வழிநூலாமாறுணர்த்துகின்றது. இ--ள் : நுதலிய நெறியானன்றி வழிநூலென்றற்குச் சிறப்புடையது அம் முதனூல்வழிப் பிறந்த வழிநூல் என்றவாறு. அது தொல்காப்பியம். மற்றுப் பல்காப்பியம் முதலியனவோவெனின்,--அவை வழிநூலே; தொல்காப்பியத்தின்வழித் தோன்றினவென்பது; என்னை?
1. செய்துகாட்டினும் என்பது யாப்பருங்கல விருத்தி போல்வனவற்றை. 2. பாட்டுந் தொகையும்--பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். 3. அழிவழக்குப்பற்றிப் பிற்காலத்து நூல் செய்யின் புறனடைச் சூத்திரம் ஒன்றே செய்ய அமையும். ஏனைய மிகையாம். ஏனெனிற் பின் அவ்வழக்குமழிதலின் என்றபடி. 4. அமையுமன்றி என்றிருப்பது நலம். |