பக்கம் எண் :

பொருளதிகாரம்689

[வழிநூல் இனைத்துவகையெனல்]

651. வழியி னெறியே நால்வகைத் தாகும்.

இது வழிநூல் இனைத்துவகைத்தென்கின்றது.

இ--ள் : மேல், வழிநூலெனப்பட்டது நான்குவகையாற் செய்யப்படும் என்றவாறு.

இதன் பயன்:--ஒருநூலுள் ஒன்றல்லது பல வாராவெனவும், அதனானே நான்குவகைய வழிநூலெனவும், முதனூலாயின் ஒன்றேயாமெனவுங் கூறியவாறாயிற்று.

அவையாவன மேற்கூறுப.

(96)

[வழிநூலின் வகைநான்கும் இவை எனல்]

652. தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே.

இந் நான்குவகையுங் காரணமாக மேற்கூறிய நால்வகை வழிநூலும் பெறலாம் என்றவாறு.

தொகுத்தலென்பது, முதனூலுள் விரிந்ததனைச் சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தொகுத்துக் கூறல்; விரித்தலென்பது, முதனூலில் தொகுத்துக் கூறப்பட்டு விளங்காது நின்றதனை விளங்குமாற்றான் விரித்துக்கூறல்; தொகைவிரியென்பது, அவ்விருவாறும் பற்றித் தொகுத்து முன்னிறீஇ அந்நிறுத்தமுறையானே பின் விரித்துக் கூறுதல். மொழி பெயர்த்தென்பது, பிறபாடையாற் செய்யப்பட்ட பொருளினைத் தமிழ்நூலாகச் செய்வது. அதுவுந் தமிழ்நூலுள் வழிநூற்கு மரபாமென்றவாறு. அதர்ப்படவென்பது, நெறிப்பட வென்றவாறு;  நெறிப்படுத லென்பது, அவ்வாறு மொழிபெயர்த்துச் செய்யுங்கால் அது கிடந்தவாற்றானே செய்யப்படும்; தொகுத்தும் விரித்துந் தொகைவிரியாகவுஞ் செய்ததனாற் பயமில்லை, தமிழர்க்கும் ஆரியர்க்குமென்பது. மொழிபெயர்த்தெனவே, பொருள் பிறழாமை பெற்றாம். 1வழக்குநூலுள்ளும் மொழிபெயர்த்து யாக்கப்படுவன உளவோவெனின்,--2அற்றன்று; அது வேண்டுமே?


1. வழக்கு நூலாகிய இலக்கண நூலுள்ளு மென்க.