பக்கம் எண் :

690மரபியல்

1வேதப் பொருண்மையும் ஆகமப் பொருண்மையும் நியாய நூற் பொருண்மையும்பற்றித் தமிழ்ப்படுக்குங்கால் அவற்றிற்கும் இதுவே இலக்கணமென்றற்கு மொழிபெயர்த்தலையும் இவற்றுக்கட் கூறினானென்பது.

இனி, படர்ந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராணமென்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்குநூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இன்றுகாறும் உளதாயிற்றெனக் கொள்க.

(97)

[நூலிலக்கணம் இதுவெனல்]

653. ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
யீரைங் குற்றமு மின்றி நேரிதின்
முப்பத் திருவகை யுத்தியொடு புணரி
னூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்.

இஃது, எல்லா நூற்கும் ஆவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : ஒத்த சூத்திரத்தினை உரை நடாத்தல்வேண்டின வழிப் பிறந்த காண்டிகையும், அக்காண்டிகையானும் விளங்காத காலத்து அதனையும் விளங்கக்கூறும் உரை விகற்பத்ததுமாகிப் பத்துவகைக் குற்றமுமின்றி நுண்பொருளவாகிய முப்பத்திருவகை உத்தியொடு பொருந்திவரின் அதனை நூலென்று சொல்லுப நுண்ணிதின் உணர்ந்துரைக்கும் புலவர் என்றவாறு.

‘ஒத்த சூத்திரம்’ என்றதனான், நூலின் வேறாகிய இருவகைப் பாயிரமுஞ் சூத்திரத்தோடு ஒத்த இலக்கணத்தவென்பது கொள்க. ‘உரைப்பின்’ என்றதனான்,

“உண்ணின் றகன்ற வுரையொடு பொருந்தி.”

(478)

வருதலை நூலிலக்கணமெனச் செய்யுளியலுட் கூறிப்போந்தாம்; அங்ஙனம் வேறாகிப் பொருந்தி வருமெனப்பட்ட உரை