பக்கம் எண் :

பொருளதிகாரம்691

யின்றிச் 1சூத்திரத்தானே பொருள்நிகழ்ந்த காலமும் உண்டென்பதாம்.

இதனது பயம்: உரையுங் காண்டிகையுமின்றிச் சூத்திரத்தானே சொற்படுபொருள் உரைத்தலுமுண்டு, 2அஃது 3அவற்றையொழிய ஆகா இக்காலத்தென்றலாயிற்று.

‘உரைப்பின்’ என்னும் வினையெச்சம், ‘கிளத்தல்’ என்பதனோடு முடியும். ‘வகை’ என்றதனான் உரையெனப்பட்டது தானும் அக்காண்டிகையின் மெய்ப்படக் கிளந்ததேயாகலின் அவ்விரண்டுஞ் செய்யுளியலுட் கூறிவந்த உரை விகற்பமேயென்பதுணர்த்தியவாறு. அஃதேல், காண்டிகையென்றாற்போல இதற்குப் பெயர் வேறு கூறானோவெனின்,--வேண்டியார் வேண்டியவாறு,

4“மறுதலைக் கடாஅ மாற்றமும்.”

(659)

எல்லையின்றி இகந்துவருவனவெல்லாம் 5உரையுள் எழுதப்படாமையின், 6அதுவுங் காண்டிகைப் பகுதியேயென்பது அறிவித்தற்கு வேறு பெயர் கூறாது ‘மெய்ப்படக் கிளந்தவகை’ என்றே போயினானென்பது.

மற்று இல்லதற்கும் இலக்கணஞ் சொல்லுவார்போல ஈரைங்குற்றமுமின்றி யென்றதென்னையெனின்,--அவற்றை எதிர்மறுத்துக் கொள்ளும் பத்துவகைக் குணமுங் கோடற்குத் தந்து கூறினானென்பது. அவை.

“எதிர்மறுத் துணரின் றிறத்தவு மவையே.”

(664)

என்புழிச் சொல்லுதும். அல்லதூஉம், 7இவை கூறியவதனானே பிறிதொரு பொருள் கொள்ளப்படும் இடங்களும் உள; அவை நோக்கி அங்ஙனங் கொள்ளாதனவுந் தொகுத்து உடன் கூறினானென்பது. 8அவையும் அவற்று விரிச்சூத்திரத்துட் கூறுதும்.


1. உரைப்பினென்றதனான் உரையின்றி நிகழ்ந்த காலமுமுண்டு என இயைக்க.

2. அஃது--அவ்வாறு சூத்திரத்தாற் பொருளுரைத்தல்.

3. அவற்றை--அவ்வுரைக்கப்பட்டவற்றை.

4. மறுதலைக்கடா--தடை: மாற்றம்--விடை.

5. உரை--விரிவுரை

6. அதுவும்--அவ்வுரையும்.

7. இவை--இக்குற்றங்கள்.

8. அவை--பிறிதொரு பொருள்கொள்ளல்.