பக்கம் எண் :

692மரபியல்

‘ஈரைங் குற்றமும்’ என்ற உம்மையை எச்சப்படுத்துப் பிறவுங் குற்றம் உளவென்பதுங் கொள்க. அவை முதனூலொடுமாறுகோடலும், யாப்பினுட் சிதைதலும்போல்வன. அவை முன்னர்ச் சொல்லும்.

‘நேரிதின்’ என்றதனான், முதல்வன் செய்த நூலாயினும் வழிநூலாயினும் 1அவ்வழிநூலின் முழுவதூஉந் தெரிந்துணரும் நுண்ணுணர்வினார்க்கே முப்பத்திருவகை யுத்தியும் புலனாவதெனக் கொள்க. அவையும் முன்னர்ச் சொல்லும். ‘வகையதாகி’ என்பது, ‘புணரின்’ என்பதனோடு முடிந்தது. ‘புணரின்’ என்பது, ‘மொழிப’ என்பதனோடு முடிந்தது.

ஒத்த சூத்திரத்தினை உரை நடாத்தல்வேண்டிற் காண்டிகைப் பொருளினை விளங்கச்சொல்லும் உரை விகற்பத்ததாகியெனவே, சூத்திரமுங் காண்டிகையும் உரையுமென மூன்றும் அவற்றோடு குற்றமின்மையும் உத்திவகையுங் கூட்ட நூலிலக்கணம் ஐந்தாயின.

இதனது பயம்:--இவற்றது விரிச்சூத்திரங்களான் உய்த்துணர்வான் எடுத்தோதித் தொகுத்துக் காட்டலாயிற்று.

மற்றுக் குற்றத்தினை இடைவைத்து உத்திவகையினை ஈற்றுக்கண் வைத்ததென்னையெனின்,--ஈரைங்குற்றமு 2மின்றிவரும் இலக்கணம் முதனூற் கண் இல்லையென்பது ‘முதல்வன்கண்’ (661) என்புழிச் சொல்லுமாகலின், அவைபோல முதனூற்கண் உத்திவகையும் வாரா, சிறுவரவினவென்றற்கென்பது.

இனி, ‘ஒத்த’ என்றதனாற் பொதுப்பாயிரமுஞ் சிறப்புப் பாயிரமும் சூத்திரமுந் தம்மின் வேறென்றலும், அவ்விருவகைப் பாயிரவுரையுஞ் சூத்திர உரையும் வேறெழுதப்படுமென்றலும், சூத்திரவுரையுட் பாயிரவுரை மயங்கிவருவன உளவென்றலும், 3அவ்விருவகையுரைக்கும் வேறாயினும் அவ்வுரை செய்தான் பெயர் கூறுதன் முதலாகிய பாயிரவுரை கூற அமையு


1. அவ்வழி நூலின்--அவ்வழிநூலின்கண்.

2. இன்றிவரும்--இன்றி வருதலாகிய

3. அவ்விருவகையுரை--சூத்திரவுரையும் பாயிரவுரையும். உரை செய்தான் பெயர் கூறன் முதலாகிய பாயிரவுரை அதற்கு வேறென்க.