“அன்பி னைந்திணைக் களவெனப் படுவ தந்தண ரருமறை மன்ற லெட்டனுட் கந்தருவ வழக்க மென்மனார் புலவர்.” (இறை. சூ. 1) என்பது, பாயிரமின்றித் தானே நூன்முகத்து நின்று இருவகைப் பாயிரவுரையும் பெய்து உரைக்கப்பட்டது. “வடவேங்கடந் தென்குமரி.” என்னுஞ் சிறப்புப்பாயிரஞ் செய்தார் பனம்பாரனாரெனவும், “வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்.” என்னும் பொதுப்பாயிரஞ் செய்தான் ஆத்திரையன் பேராசிரியனெனவும் பாயிரஞ்செய்தான் பெயர் கூறியவாறு. 1‘என்பது, பாயிரம்; என்னுதலிற்றோ (எனின்),--எனப் பாயிரவுரைக்கு முகவுரை வந்தவாறு கண்டுகொள்க. பிறவும் அன்ன. (98) [ஐய மறுத்தல். இதுவு நூற்குரிய இலக்கணமெனினுமாம்] | 654. | 2உரையெடுத் ததன்முன் யாப்பினுஞ் சூத்திரம் புரைதப வுடன்படக் காண்டிகை புணர்ப்பினும் விடுத்தலும் விலக்கலு முடையோர் வகையொடு புரைதப நாடிப் புணர்க்கவும் படுமே. |
இஃது ஐயம் அறுத்தனுதலிற்று; என்னை? மேற்கூறிய சூத்திரம் உரைபெறுங்காற் காண்டிகையும் உரையும் வேறு வேறு பிறக்கக்கண்ட மாணாக்கன் ஒழிந்தனவும் ஒன்றொன்றனை ஒழித்துவருங்கொலென்று ஐயுற்றாற்குக் காண்டிகையும் உரையுமே கண்டாய் ஒன்று ஒன்றனை ஒழிந்து வருவனவென்று ஐயம்அறுத்தமையின். மேலதற்கே புறனடையெனவும் அமையும். இ--ள் : உரையெடுத்து அதன்முன் யாப்பினும்--காண்டிகையினை விளக்குங் கருத்தினாலும் அக்கருத்தின்றியும் அச்சூத்திரத்திற்கு3உரை தொடர்ந்தெழுதினும்; சூத்திரத்தினை அதுவென்று சுட்டினான். “முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்து.” (தொ. சொ. 39) என்பதனானெனவுணர்க.
1. இங்கும் எனின் என்பது சிதைவுற்றதுபோலும். 2. இதற்கு உரையாசிரியர் கூறுவதே பொருத்தம். 3. உரை--விரிவுரை. |