பக்கம் எண் :

பொருளதிகாரம்695

சூத்திரம் புரைதப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்--அச்சூத்திரத்திற்கு இடையின்றிக் காண்டிகை பொருந்தச்செய்யினும் ‘புரைதப’ என்பதனான், மேல் இடைபுகுமெனப்பட்ட பாயிரவுரையின்றிச் 1செய்த காண்டிகைக்கும் பெரும்பான்மையெனக் கொள்க. ‘உடன்பட’ என்பதனாற் காண்டிகையல்லாத முகவுரைக்கண்ணே முன்னும் பின்னுங் காண்டிகை பெய்து உரைத்தலுங் கொள்க. கொள்ளவே 2முற் கூறிய ஐந்தும் ஒருங்கு வருதலும் இவ்வாறே பெற்றாம்.

விடுத்தலும் விலக்கலும் உடையோர் வகையொடு--கடாவிற்கு விடை கூறுவாரும் போலி மறுப்பாருஞ் சொல்லுஞ் சொற்பகுதியோடு; ‘வகை’ என்றதனான், அவ்விருபகுதியுங் காண்டிகைக்கு வருங்காற் குறிப்பினாற் கொள்ள வருமெனவும் உரைக்கண் வருங்காற் கூற்றினாற் கொள்ள வருமெனவுங் கொள்க. அஃதேற் கூற்றினாற் கோடன்,

“மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்”

(659)

என வருகின்ற சூத்திரத்திற் பெறுதுமெனின்,--அற்றன்று; அது பிறன்கோள்பற்றி மறுதலைக் கடாஅ மாற்றமுங் கூறுதற்குச் சொல்லினான்; இஃது அன்னதன்றி அறியாது வினாவுந் துணையேயாகலின் வே3றென்பன, விடுத்தலெனவே, வினா வினை விடுத்தல்பெற்றாம். விலக்கலெனவே, அஃதல்லாப் போலியை விலக்குதலென்பது பெற்றாம்.

புரைதப நாடிப் புணர்க்கவும்படுமே--காண்டிகையிரண்டும் உரையிரண்டுமென்று வருகின்ற நான்கன்கண்ணும் 4இடை அந்தரமின்றிப் புணர்க்கவும்படும் 5அவ்விருபகுதியும் என்றவாறு.

அஃதாவது, 6காண்டிகைப்பகுதி இரண்டற்கும் ‘விடுத்தலும் விலக்கலும் உடையோர்’ குறிப்பினாற் கொள்ளவைத்


1. செய்த--செய்தல் என்றிருத்தல்வேண்டும்.

2. முற்கூறிய ஐந்து--சூத்திரம், உரை, காண்டிகை, குற்றமின்மை, உத்திவகை.

3. என்பன--எனப்படும் என்றிருத்தல் வேண்டும்.

4. இடை அந்தரம் -- இடைவெளி.

5. அவ்விருபகுதி--விடுத்தலும், விலக்கலும்.

6. காண்டிகையுரைப்பகுதி இரண்டு--சூத்திரம்பட்ட பண்பிற் சொல்வதும் அஃதின்றி ஏதுவும் எடுத்துக்காட்டும் கூறுவதும். (101, 102-ம் சூத்திரம்.)