தலும், 1ஒழிந்த உரையிரண்டன்கண்ணும் அவை கூற்றினாற் கொள்ளவைத்தலுமென உணர்க.2உம்மை, இறந்தது தழீஇயிற்று; என்னை? காண்டிகையும் உரையும் ஒன்று ஒன்றனை ஒழித்தும் வருமென்றமையின். ஒழியாது வருதல் ‘உடன்பட’ என்றதனால் தழுவப்பட்டது. இவற்றிற்கு உதாரணமாமாறு தத்தம் விரிச்சூத்திரத்துட் சொல்லுதும். (99) [சூத்திரமாவது இதுவெனல்] | 655. | மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு சில்வகை யெழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை யுரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த வொண்மைத் தாகித் துளக்க லாகாத் துணைமை யெய்தி யளக்க லாகா வரும்பொருட் டாகிப் பலவகை யானும் பயன்றெரி புடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர். |
இது, நிறுத்தமுறையானே சூத்திரமாமாறுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : மேற் கிளந்து எடுத்த யாப்பின் உட்பொருளொடு, “சூத்திரந் தானே, ஆடி நிழலி னறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருணனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே.” என மேற் செய்யுளியலுள் விதந்தோதிய இலக்கணமுடைத்தாய்; எனவே, வழுவமைக்கின்ற கிளவியாக்கத்து முற்கண்ணே, வினையியலுட் கூறப்படும் இலக்கணத்தினை ஆண்டு ஓர் உபகாரப்படக் கூறியதுபோல, அடிவரையின்மைக்கு ஆண்டுக் கூறியதல்லது இச் சொல்லப்பட்ட இலக்கணம், ஈண்டு இனிக் கூறுகின்ற இலக்கணத்தோடு கூடி மரபெனவேபடும் என்றானாம். ஆண்டுப் பொதுவகையாற் கூறிய நூலிற்கும் இஃதொக்கும்; என்னை? பல சூத்திரந் தொடர்ந்து நூலாகி ஈண்டே
1. ஒழிந்தவுரையிரண்டு--விரிவுரை இரண்டு. பின்வரும் சிறப்புச் சூத்திரங்களை நோக்குக. (658, 659-ம் சூத்திரம்) 2. உம்மை--புணர்க்கவும் என்ற உம்மை. |