பக்கம் எண் :

பொருளதிகாரம்697

மரபு கூறப்படுதலின். உரையாயின் அன்னதன்றி 1நால்வகையுரையுள் 2ஏற்பது பகுதி வேறுபடும் மரபுகூறுகின்றமையின் அது செய்யுளியலுட் கூறியவாறுபோலாகாது வேறெனவேபடும் ஈண்டென்பது.

இனி, முற்கூறிய பாயிரவிலக்கணத்தினை இன்றியமையாதது 3சூத்திரமென்றற்கும் இதுவே ஓத்தாகக் கொள்க; என்னை? 4மேற் 5புறத்துநின்று ‘மேற்கிளந் தெடுத்த யாப்பு’ எனவேபடுமாகலி னென்பது.

இதனது பயம்: பாயிரவிலக்கணங்களோடு பொருந்தச் சூத்திரஞ்செய்தலென்பதாயிற்று. இஃது ஒப்பக்கூறல் (665) என்னும் உத்திவகை.

மேற்கிளந்தெடுத்த இலக்கணமாவது, ஆடிநிழற்போல் பொருளானுந் 6தேர்தல் வேண்டாமற் பொருட்பெற்றி உணர்கின்றாங்குச் சூத்திரத்தொடருள் இலக்கியமின்றாயினும் 7அதனை இதுகேட்டான் காணுமாற்றாற் செய்தலாயிற்று.

இனி, மேற் கிளந்தெடுத்த பாயிரவிலக்கணம் சூத்திரத்தோடு பொருந்துங்காற் பொதுப்பாயிரவிலக்கணம் பொருந்தா, சிறப்புப்பாயிரவிலக்கணம் எட்டுமே பொருந்துவனவெனக் கொள்க. அஃதென்னை பெறுமாறெனின்,--மேற்கிளந்த யாப்பென்னாது எடுத்த யாப்பென்றதனானே ஒரு நூற்குச் சிறப்பு வகையான் இன்றியமையாததாகி எடுத்துக்கொள்ளப்படுவது,

“வடவேங்கடம் தென்குமரி.”

(பாயிரம்)

என்றாற்போலுஞ் சிறப்புப்பாயிரமாகலானும், பொதுப்பாயிரம்


1. நால்வகையுரை என்றது -- ‘பாட்டிடை வைத்த’ என்னுஞ் (465-ம்) சூத்திரத்தாற் கூறப்படும் நால்வகையுரையை.

2. ஏற்பது என்றது அவற்றுள் ‘பாவின்றெழுந்த கிளவியானும்’ என்று கூறிய உரைப்பகுதியை. பகுதி வேறுபடுதல்--காண்டிகையும் உரையும் எனப் பகுதி வேறுபட்டுப் பின் அவையும் இவ்விரண்டாதல். 653-ம் சூத்திர உரை நோக்குக.

3. சூத்திரம் இன்றியமையாதது என்றற்கும் இதுவே ஓத்து என்க.

4. மேல்--முன்.

5. புறம்--நூற்புறம்.

6. தேர்தல்வேண்டாது--வெளிப்பட என்றபடி.

7. அதனை--அவ்விலக்கியத்தை. இது--இலக்கணம்.