பக்கம் எண் :

700மரபியல்

“ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர்.”

(தொ. எழு. 296)

என்பதூஉம் முதலாயவற்றிற்கும் இஃது இன்றியமையாதாகலும் இதற்கு அவை இன்றியமையாவாகலும் உடைமையின், துளக்கலாகாத் துணைமையெய்தியதூஉ மாயிற்று. இருபத்துநான் கீறும் இருபத்திரண்டு முதலும்பற்றி எழுந்த மொழிகளெல்லாம் வேற்றுமைக்கண்ணும் அல்வழிக்கண்ணும் இருமொழித் தொழிலும் ஒருவகையால் தொகுத்துக் கூறினமையின் அளக்கலாகா அரும்பொருட்டாதலும் பெற்றாம். இங்ஙனம் வருதல் இயல்பெனவே சிறிய  வேறுபட்டு வருவன உளவாயின் அவையும் அமையுமென்றானாம்; அவை,

“அந்நா லைந்து மூன்றுதலை யிட்ட
 முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே.”

(தொ. 7. 206)

என்றாற்போல்வனவும் 1பிறவும் இலேசுச் சொல்லும் இயல்பன்றி விகாரமெனப்படும்.

(100)

[காண்டிகை உரை இதுவெனல்]

656. பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற்
சுரப்பின்றி முடிவது காண்டிகை யாகும்.

இது, முறையானே காண்டிகையாமாறுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : குற்றமில்லாத சூத்திரந் தனதுட்பட்ட இலக்கணத்துள் ஒன்றுங் கரவாது முடியச்செய்வது காண்டிகையாம் என்றவாறு.

‘பழிப்பில் சூத்திரம்’ என்றதனால், காண்டிகை செய்யத்தகாதென்று இகழ்ச்சிப்படப் பரந்தன உளவாயின் மறுத்துச் செய்கவென்பதாம். இதனை வருகின்ற காண்டிகைக்கும் அகலவுரைக்கும் ஏற்பித்துக்கொள்க.

உதாரணம்: 2“எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன அகரமுத, னகரவிறுவாய் முப்பஃது என்று சொல்லுவார் ஆசிரியர், சார்ந்துவரவிலக்கணத்த மூன்றுமல்லாத இடத்து” (தொ. எழு. 1) எனவரும்; பிறவும் அன்ன, இனி, மறுத்துச் செய்யுங்கால்,


1. பிற இலேசுச் சொல்லும் எனவும் பாடம். அது சிறப்பு.

2. இது காண்டிகைஉரைக் குதாரணம்.