இ--ள் : 1விட்டகல்வின்றி விரிவொடு பொருந்தி--சொற்படுபொருள் சொல்லுங்கால் தொடர்மொழிகளைத் 2தொகைநிலைபயனிலை முதலாயவற்றாற் பகுத்துக்கூறாது பகுத்துக் கூறும் உரை விகற்பம்போன்று மற்றப் பொருள்தோன்றி; விடுத்தலென்பது, 3கண்ணழிவு: அக்கண்ணழிவான் அகன்றுபடுதல் விட்டகல்வெனப்பட்டது. அங்ஙனம் அகன்றுபடுத4லின்றி யெனவே, ‘இஃது இன்ன வேற்றுமைத் தொடர் இஃது இன்ன பயனிலைத்தொடர்’ என்றாற்போலச் சொன்னிகழ்ச்சியுடைத்தாயின் அஃது உரையெனப்படுமென்றானாம். சுட்டிய சூத்திரம் முடித்தற்பொருட்டா--இது நியமச்சூத்திரம் அதிகாரச் சூத்திரமென்றாற்போல முதற்கட் சொல்லிய சூத்திரப் பெயரினை அவ்வாறாகி முடிந்த முடிபு சொல்லுதற் பொருட்டாக; ஏது நடையினும்--நியமச் சூத்திரமென்றானும் பிறிதொன்றென்றானும் மேற்கொண்டக்கால் இன்னது காரணத்தினெனக் காரணங்கூறும் வழக்கினானும்; எடுத்துக்காட்டினும்--அங்ஙனங் காரணங் கூறியக்கால் அதற்கேற்பது ஒன்றாயினும் உதாரணமாயினும் வழி நூற்காயின் முதனூல் எடுத்துக்காட்டுதலாயினும் ஒன்றுபற்றியும்; மேவாங்கமைந்தமெய்ந் நெறித்து அதுவே--சூத்திரஞ்செய்த ஆசிரியன் வேண்டியதே சொல்லிவிடும் பொருளிலக்கணத்திற்று மேற் கூறிவருகின்ற காண்டிகை என்றவாறு. 5இது, ‘மெய்ந்நெறி’ என்பது, சூத்திரத்துச் சொல்லிற்கருதிய பொருளிலக்கணம். அதனை அவன் வேண்டியாங்குச் சொல்லி முடிப்பினல்லது சூத்திரத்துச் சொற்கண் வந்த சொல்லாராய்ச்சியும் எழுத்தாராய்ச்சியும் அறியவேண்டுவனவெல்லாஞ்
1. விட்டகல்வு--பதம் பிரித்துப் பொருள்கூறலால் அகன்றுபடுதல். 2. தொகைநிலை பயனிலை முதலாயவற்றால் என்றது தொகை நிலைத்தொடர், பயனிலைத்தொடர், எண்ணுநிலைத்தொடர் என்பவற்றை. உதாரணம் குடம் வனைந்தான், சாத்தன் வந்தான், தீநீர் என்பன. இவற்றை நன்னூல் விருத்தி 3-ம் சூத்திர உரை நோக்கியறிக. 3. கண்ணழிவு--பதம் பிரித்தல் எனவே பதம் பிரித்துப் பொருள் கூறல் என்றபடி. 4. இன்றி--பதப்பொருள் இன்றி. 5. இது என்பது வேண்டியதில்லை. இனி என்று மிருக்கலாம். |