பக்கம் எண் :

பொருளதிகாரம்703

சொல்லாரென்பது கருத்து. இதனை ஈற்றுக்கண் வைத்ததனானே வருகின்ற உரையும் இங்ஙனம் விட்டகல்வின்றி வருதலுடைத்தெனக் கொள்க.

உதாரணம்:

“இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்.”

(தொ. சொ. 19)

என்பது, 1தன்றன்மையான் நிகழ்பொருளை இன்ன தன்மைத் தென்று சொல்லுகவென்றவாறு. அது, 2‘நிலம் வலிது, நீர் தண்ணிது, தீவெய்து, வளியுளரும்’ என்றாற்போல்வன. இதற்குக் 3கருத்தோதுதல் பாயிரவகையாற் பெறுமென்பது,

“உரைப்பிற் காண்டிகை.”

(953)

என்புழிக் கூறிவந்தாம்.

மற்று, 4‘உயர்திணையென்று சொல்லுப ஆசிரியர் மக்கட் சுட்டின்கண், அஃறிணையென்று சொல்லுப ஆசிரியர் அவரல பிறவற்றுக்கண், அவ்விருதிணைப் பொருண்மேலும் இசைக்குஞ் சொல்லினை’ (தொ. சொ. 1)என்றக்காலும்,

‘வேற்றுமையெனப்பட்ட பொருள் ஏழு’ என்றக்காலும் உதாரணங் காட்டுமாறென்னை? அவற்றவற்றுப் பின் வேறு சூத்திரங்களான்,

“ஆடூஉ வறிசொன் மகடூஉ வறிசொற்
 பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி.”

(தொ. சொ. 2)

எனவும்,

“ஒற்றறி சொல்லே பலவறி சொல்லென்று.”

(தொ. சொ. 3)

எனவும்,

“அவைதாம் பெயர்ஐ யொடுகு
 இன் அது கண்.”

(தொ. சொ. 65)

எனவும் உதாரணங் கூறுமாலெனின்,--அவை துளக்கலாகாத் 5துணைமையெய்தி நின்றமையின் அவ்வாறு உதாரணம் ஆண்டுக்


1. ‘தன்றன்மையான்--தன்னியல்பான்.

2. இது சூத்திர முடித்தற் பொருட்டாக உதாரணங்காட்டி விளக்கியது. இச்சூத்திரம் நியமச் சூத்திரம்.

3. கருத்து--கருத்துரை. என்றது “தன்றன்மையான்...சொல்லுக” என்ற கருத்துரையை.

4. இது பேராசிரியர் கொண்ட பொருள்.

5. துணைமை--துணைச்சூத்திரங்கள். துணை-உதவி. 655-ம் சூத்திர விரிவுரை நோக்குக.