காட்டாக்காலும் அமையும், அவற்றைப் பிற் கூறுமாகலினென்பது. அல்லதூஉம், எதிரது நோக்கி உயர்திணைச் சொன் மூன்றும் அஃறிணைச் சொல் இரண்டுங் காட்டியக்காலும் இழுக்கன்றென்பது. ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும். (102) [உரையாவது இதுவெனல்] | 658. | சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற வின்றி யமையா தியைபவை யெல்லா மொன்ற வுரைப்ப துரையெனப் படுமே. |
இது மேல், “ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி” (652) என நிறுத்தமுறையானே காண்டிகையினை மெய்ப்படக் கிளந்த வகை யுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : மேல், “பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின்.” (656) வருதலும், அதுவே ஏதுவும் எடுத்துக்காட்டும் உடைத்தாகி வருதலுமென இருவகையும் உடைத்தென்றான்; இனிச் சூத்திரத்துட் பொருளன்றியும் ஒருதலையாக அதற்கு இன்றியமையாது பொருந்துவனவெல்லாம் 1அதனோடு கூட்டிச் சொல்லுதல் உரையெனப்படும் என்றவாறு. அவை, “இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்.” (தொ. சொ. 19) என்றவழி, 2எடுத்தோத்தின்றி ‘நிலம் வலிதாயிற்று’ என்னும் 3வழுவமைதி கோடலும், ‘ஒத்தசூத்திரம்’ (653) என்றவழி, பாயிரம் ஒத்தசூத்திரமென்று கோடலும் இன்னோரன்ன கொள்க.
1. அது--அச்சூத்திரம். 2. எடுத்தோத்து--சூத்திரம். 3. ஆயிற்றென்பது வழு. சேற்றுநில் மிதித்துச் சென்றான் கூறியதாதலின் அமைதியாயிற்று. சேனாவரையருரை நோக்குக. |