பக்கம் எண் :

பொருளதிகாரம்705

எல்லாமென்றதனாற் சூத்திரப் பொருளேயன்றி எழுத்துஞ் சொல்லும்பற்றி ஆராயும் பகுதியுடையவாதல்வேண்டும் அவ்வுரையென்பது கொள்க.

இனி, மேற் காண்டிகைக்கு ஓதிய இலக்கணங்களுள் இதற்கேற்பனவெல்லாம் அதிகாரத்தாற் கொள்ளப்படும். அவை ஏது நடையும் எடுத்துக்காட்டுஞ் சூத்திரஞ் சுட்டுதலுமென்(658)றின்னோரன்ன கொள்க. இவையெல்லாந் தழுவுதற்குப்போலும்,

“இன்றி யமையா தியைபவை யெல்லாம்.”

(658)

என்று எடுத்தோதுவானாயிற்றென்பது.

(103)

[உரையின் பகுதி இவ்வாறு வரும் எனல்]

659.1மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்த்
தன்னூ லானு முடிந்த நூலானு
மையமு மருட்கையுஞ் செவ்விதி னீக்கித்
தெற்றென வொருபொரு ளொற்றுமை கொளீஇத்
துணிவொடு நிற்ற லென்மனார் புலவர்.

இதுவுங் காண்டிகைபோல உரையும் இருவகைத்தென்பது அறியுமாற்றான் எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : மறுதலைக்கடாஅ மாற்றமும் உடைத்தாய்--மறுதலை மாற்றத்தினை இடைசெறித்துக் கடாவுதலும் அதற்கு மறுமாற்றமாகிய விடை கூறுதலும் உடைத்தாய்; தன் நூலானும்--உரையெழுதுவானாற் கூறப்படுகின்ற உரை தனக்கு முதனூலாகிய சூத்திரத்தானும், 2இதனானே உரையின்றிச் சூத்திரமே நூலெனப்படுவதூஉமாயிற்று; முடிந்த நூலானும்--அதன் முதனூலானும்; முடிந்த நூலென்பது இணை நூலென்பாரும் உளர்’: 3இணைவன கூறத் தான் கூறானாயின் அது குன்றக் கூறலென் மறுக்க. அங்ஙனங் கொள்ளும் பொருண்மையுளவாயின் அவை,

“சூத்திரத் துட்பொரு ளன்றியும்.”

(658)

என்பதனான் அடங்கும்.


1. இச்சூத்திரத்தையும் விரிவுரை யிலக்கண முணர்த்தியதாகவே இளம்பூரணர் கூறுவர். அது பொருத்தமாதல் காண்க.

2. இதனான்--தன்னூலானுமென்றதனான்.

3. இணைவன--இணைநூல்கள்.