பக்கம் எண் :

100நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

அவளைப்போக விடுக்குமிடத்தும்; சேய் நிலைக் ககன்றோர் செலவினும் வரவினும் = தொலை செல்லும் தலைமக்களின் உடன்போக்கிலும், அவர் மறுதரவிலும்; கண்டோர் மொழிதல் கண்டதென்ப = உடன்போம் தலைமக்களைக் கண்டவர்கள் கூற்று நிகழ்த்தல், வழக்கின்கண் காணப்பட்டதென்பர் அகப்பொருள் நூலார்.

பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவினாகிய குற்றங் காட்டற்குச் செய்யுள்:

“எல்லு மெல்லின்று, பாடுங் கேளாய்,
 செல்லா தீமோ சிறுபிடி துணையே
 வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென,
 வளையணி நெடுவே லேந்தி
 மிளைவந்து பெயருந் தண்ணுமைக் குரலே”

(குறு. 390)

கண்டோர் ஊரணிமை கூறும் கிளவி வருமாறு:

“நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள்,
 பல்கதிர்ச் செல்வன் கதிரும் ஊழ்த்தனன்,
 அணித்தாற் றோன்றுவது எம்மூர்,
 மணித்தார் மார்ப! சேர்ந்தனை சென்மோ. ”

(பொருள். புறத். சூ. 40. உரைமேற்கோள்)

ஆர்வ நெஞ்சமொடு கண்டோர் கூறியதற்குக் கூற்று:

“வில்லோன் காலன கழலே, தொடியோண்
 மெல்லடி மேலவுஞ் சிலம்பே, நல்லோர்
 யார்கொல் அளியர் தாமே, ஆரியர்
 கயிறாடு பாறையிற் கால்பொரக் கலங்கி
 வாகை வெண்ணெற் றொலிக்கும்
 வேய்பயில் அழுவம் முன்னி யோரே. ”

(குறு. 7)

“பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
 செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர்
 யார்கொல்?அளியர் தாமே, வார்சிறைக்