பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை101

குறுங்கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கைக் காத லோரே. ”

எனும் ஐங்குறுநூறு மது. (381)

அழிந்தெதிர் கூறி விடுத்தற்குச் செய்யுள்

“இதுநும் மூரே, யாவருங் கேளீர்;
 பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டும்;
 ஈன்றோர் எய்தாச் செய்தவம்
 யாம் பெற்றனமால் மீண்டனை சென்மோ. ”

(பொருள்40சூ. மேற்கோள். )

தாய் நிலை கண்டு கண்டோர் தடுத்தற்குச் செய்யுள்:

“பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி!
 சிலம்புகெழு சீறடி சிவப்ப
 இலங்குவேற் காளையொடு இறந்தனள் சுரனே. ”

தாய்நிலை கண்டு விடுத்தற்கு மேற்கோள்:

“நெருப்பவிர் கனலி உருப்புச்சினந் தணியக்
 கருங்கால் யாத்து வரிநிழ லிரீஇச்
 சிறுவரை இறப்பிற் காண்குவை, செறிதொடிப்
 பொன்னேர் மேனி மடந்தையொடு
 வென்வேல் விடலை முன்னிய சுரனே”

(ஐங். 388)

சேய்நிலைக்ககன்றோர் செலவிற் கண்டோர் கூறும் கூற்று :

“செய்வினைப் பொலிந்த செறிகழல் நோன்தாள்
 மையணற் காளையொடு பைய வியலிப்
 பாவை யன்னஎன் ஆய்தொடி மடந்தை
 சென்றனள், என்றிர் ஐய!
 ஒன்றின வோஅவள் அஞ்சிலம் படியே?”

(ஐங். 389)

இதில் செவிலி கொண்டுகூறும் கண்டோர் கூற்றைக் காண்க.