பக்கம் எண் :

102நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

மறுவரவின்கட் கண்டோர் கூறுதற்குச் செய்யுள் :

“இவன்இவள் ஐம்பால் பற்றவு மிவளிவன்
 புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
 காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிராது
 ஏதில் சிறுசெரு வுறுப மன்னோ;
 நல்லைமன் றம்ம பாலே! மெல்லியற்
 துணைமலர்ப் பிணைய லன்னஇவர்
 மணமகிழ் இயற்கை காட்டி யோயே”

(குறு. 229)

சூத்திரம் : 40 
  “ஒன்றாத் தமரினும், பருவத்துஞ், சுரத்தும்,
 ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும்,
 இடைச்சுர மருங்கின் அவள்தம ரெய்திக்
 கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞ ரெய்திக்
 கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட
 அப்பாற் பட்ட வொருதிறத் தானும்;
 நாளது சின்மையும், இளமைய தருமையும்,
 தாளாண் பக்கமும், தகுதிய தமைதியும்,
 இன்மைய திளிவும், உடைமைய துயர்ச்சியும்
 அன்பின தகலமும் அகற்சிய தருமையும்;
 ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்;
 வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு
 ஊதியங் கருதிய ஒருதிறத் தானும்;
 புகழும் மானமும் எடுத்துவற் புறுத்தலும்;
 தூதிடை யிட்ட வகையி னானும்;
 ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்;
 மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையும்,
 தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்,
 பாசறைப் புலம்பலும், முடிந்த காலத்துப்
 பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்;
 காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்;
 பரத்தையின் அகற்சியிற் பரிந்தோட் குறுகி
 இரத்தலும் தெளித்தலும் எனஇரு வகையொடு
 உரைத்திற நாட்டங் கிழவோன் மேன”