| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 103 |
கருத்து : இது உடன்போக்கும், பிரிவின் வகையும், பிற காரணங்களும் பற்றித் தலைவனுக்குக் கூற்று நிகழும் இடன் கூறுகின்றது. பொருள் : ஒன்றாத்தமரினும், பருவத்தும், சுரத்தும் ஒன்றிய மொழியொடு வலிப்பினும் = வரைவுடன் படாத சுற்றத்தோடும், பருவத்தின்கண்ணும், சுரத்திலும் ஏற்புடைச் சொல்லொடு தலைவியை உடன்கொண்டு செல்லத் துணியுமிடத்தும்; விடுப்பினும் = கொண்டு தலைக்கழியாமல் தலைவியைத் தான் விடுத்துப் பிரியுமிடத்தும்; இடைச்சுரமருங்கில் அவள் தமர் எய்தி = உடன்போக்கில் அரும் வழியினிடையே தலைவியின் தன்னையர் முதலிய சுற்றத்தாருற்று; கடைக்கொண்டு பெயர்தலில் = தலைவியைக் கொண்டு திரும்புமிடத்து; கலங்கஞரெய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட = தலைவி மயங்கித் துன்பமெய்திக் கற்பால் தலைவன்பால் சேறலாலுளவாம் பூசலுட்பட; அப்பாற்பட்ட ஒரு திறத்தானும் = அத்தகைய (பல) பகுதிப்பட்ட ஒரு முறையானும்; நாளது சின்மையும் = வாழ்நாளின் சின்மையால் பொருள் வலித்தலும்; இளமைய தருமையும் = இன்ப நுகர்ச்சிக்குரிய இளமையின் அருமை (பொருட்பிணியை) நலித்தலும்; தாளாண்பக்கமும் = முயற்சியின் பெருமை கருதிப் பொருள் வலித்தலும்; தகுதிய தமைதியும் = தலைவியைப் பேணும் ஒப்புரவாண்மையறம் பொருட் பிணியை மெலித்தலும்; இன்மையதிளிவும் = இலம்பாட்டின் இழிவு கருதிப் பொருள் வலித்தலும்; உடைமைய துயர்ச்சியும் = தனக்குக் கிடைத் திருக்கும் தலைவியின் காதலாகிய புத்துடைமைச்சிறப்பு பொருட்பிணியை மெலித்தலும்; அன்பினதகலமும் = தலைவிபால் அன்பின் பெருக்கால் அவள் பொருட்டுப் பொருள் வலித்தலும்; அகற்சிய தருமையும் = அவளைப் பிரிந்திருக்க ஒல்லாமை பொருட்பிணியை மெலித்தலும்; ஒன்றாப் பொருள் வயின் ஊக்கிய பாலினும் = ஆக இவ்வாறு (ஒன்றுக்கொன்று மாறுபட்டுப்) பொருந்தாத பொருள்பற்றி வலிக்கும் பிரிவின் பகுதிகளிலும்; வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு ஊதியங்கருதிய ஒருதிறத்தானும் = நூல் முதலிய வாயாற் கற்கும் கல்வியும், படை இயம் ஓவியம் முதலிய கையாற் பயிலும் கலையும் என வகுக்கப்பட்ட இறுதிறக்கல்விப் பகுதிகளின் பயனை எண்ணிப்பிரியும் ஒரு பகுதிக்கண்ணும்; புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் = (இவ்விரண்டிலும்) பிரிவால் வரும் புகழையும் பிரியாமையால்வரும் குற்றத்தையும் விளக்கி வலியுறுத்துமிடத்தும்; தூதிடையிட்ட |