பக்கம் எண் :

104நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

வகையினானும் = தலைவியைப் பிரிந்து வேந்தரிடைச் செல்லும் வாயில் வகைகளிலும்; ஆகித்தோன்றும் பாங்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியும் = மேலே கூறியாங்குப் பொருள் ஓதல் தூது என்ற பிரிவின் பகுதி மூன்றிலும் கூற்றுக்கு அமைந்துவரும் பகுதி தொறும் ஏற்றவிடத்தும்; மண்டிலத்தருமையும் = பகைப்புலத்தின் அருமையும்; தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் = புகழாற் சிறந்த பகைவரின் பெருமையும்; பாசறைப் புலம்பலும் = போர்க்களக்கட்டூரிற் செரு முடிந்தபின் தலைவியை உள்ளும் தலைவன் தனிமையும்; முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத் திறவகையினும் = வந்தவினை முடிந்த பொழுது தேர்ப்பாகனொடு தலைவன் தான் செய்ய விரும்புவன கூறும் வகையினும்; காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும் = பிறர் நாடு காக்குமிடத்தானும் ஓர் பிரிவின்கண்ணும்; பரத்தையினகற்சியிற் பரிந்தோட்குறுகி = பரத்தைப் பிரிவால் பரியும் தலைவியை அணுகி; இரத்தலும் = தன் தவறு பொறுக்குமாறு தலைவன் வேண்டுதலும்; தெளித்தலும் = தன் தவறின்மை கூறித் தலைவியைத் தேற்றலும்; என இருவகையொடு = என இவ்விரண்டு வகையொடுகூட; உரைத்திற நாட்டம் = மேற்கூறிய இடங்களிலெல்லாம் கூற்றுவகை நாடுதல்; கிழவோன் மேன = தலைவன்கண் நிகழும்.

குறிப்பு : இச்சூத்திரம், ஒன்றாத் தமரினும் என்பது முதல் ஒருதிறத்தானும் என்றதுவரை உடன்போக்கில் தலைவன் கூற்று நிகழுமிடங்களைச் சுட்டும் பகுதியும், பின் எஞ்சியவெல்லாம் பிரிவின்கண் தலைவன் கூற்று நிகழுமிடங்களைச் சுட்டும் பகுதியுமாக அமைந்துள்ளது. பிற்றைய பிரிவுப்பகுதியில் ஆறுவகைப்பிரிவும் கூறப்படுகிறது. நாளது சின்மையும் என்பதுமுதல், பொருள்வயின் ஊக்கிய பாலினும் என்பதீறாகப் பொருட் பிரிவும் (1), வாயினும் கையினும் என்பது முதல் எடுத்து வற்புறுத்தலும் என்றதுவரை ஓதற் பிரிவும் (2), தூதிடையிட்ட வகையினானும் என்பதால் தூதிற் பிரிவும் (3), மண்டிலத்தருமை முதல் வினைத்திற வகையினும் என்றதுவரை பகைவயிற் பிரிவுவகையும் (4), காவற்பாங்கின் ஆங்கோர் பக்கமும் என்பதால் நாடு காவற்பிரிவும் (5), பரத்தையினகற்சி என்பதால் பரத்தையிற் பிரிவும் (6), ஆகப் பிரிவு வகை ஆறும் முறையே வகைப்படுத்திக் கூறப்பட்டன. பாசறைப் புலம்பல், பாகனொடு கூறல் முதலியன பகைவயிற் பிரிவின்பாற் பட்டடங்கும், ஆகித்தோன்றும் பாங்கோர் பாங்கினும், மூன்றன் பகுதியும் என்பது, அதற்கு முன் வகைப்படுத்திக் கூறப்பட்ட “பொருள்,