| 106 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
மற்ற மூன்றில் பகை காவலாகிய இரண்டும் தன்னளவிலும் பரத்தை தலைவி அளவிலும் பகைமை சுட்டுதலால் அம்மூன்றையும் வேறாக்கி, எண்ணும்மைகளை எல்லாம் இறுதியில் ஒடுக்கொடுத்துக் கூட்டிப் பிரிவுவகை. ஆறும் விளக்கப்பட்டுள. ஒன்றாத்தமரினும், பருவத்தும், சுரத்தும் என்பவற்றுள் ஒவ்வொன்றின்கண்ணும் தலைவன் வலித்தலும், விடுத்தலும் இயல்பாகும். அவை வருமாறு: ஒன்றாத்தமர் உடன்படுமாறு தலைமகன் சான்றோரை விடுத்தது கேட்ட தோழி கூற்றாகவரும், “எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை ஓதம் வாங்குந் துறைவன் மாயோள் பசலை நீக்கின னினியே. ” என்னும் ஐங்குறுநூற்று (145)ஆம் செய்யுளால், தலைவிதமர் மகட்கொடைக்கு ஒன்றாவழித் தலைவன் உடன்கொண்டு கழியத் துணிதலுண்மை விளங்கும். “பெருநன் றாற்றிற் பேணாரு முளரே, ஒருநன்றுடைய ளாயினும் புரிமாண்டு புலவி தீர வளிமதி, இலைகவர் பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரன் மென்னடை மரையா துஞ்சு நன்மலை நாட! நின்னல திலளே. ” (குறுந். 115) இக்குறுந்தொகைச் செய்யுளில், ‘நன்மலை நாட நின்னலதிலளே’ எனத் தோழி தலைவற்குக் கூறுதலால், தலைவனுக்குத் தலைவியைத்தரத் தமர் ஒன்றாமையும் அதனால் தலைவன் கொண்டுதலைக்கழிய வலித்தலும் கூறப்பட்டது. இனி, மணமறுத்த ஒன்றாத்தமரை உடன்படுத்தற் பொருட்டுப் பொருளீட்டக் கருதித் தலைவியை விடுத்துப் பிரிவதற்குச் செய்யுள்: “இலையிலஞ்சிணை” எனும் (254ஆம்) குறும்பாட்டில், “வாரா, தோழி. . . . . . . . . . . . . . . . . . செய்பொருள் தரல்நசைஇச் சென்றோர் |