| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 107 |
எய்தின ராலென வரூஉந் தூதே. ” எனப் பொருள்தேடித்தரச் செல்லும் தலைவன் பிரிவு கூறப்படுதலறிக. “பொத்தில் காழி” எனும் (255ஆம்) குறும்பாட்டிலும், “தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும் காமர் பொருட்பிணிப் போகிய நாம்வெங் காதலர் சென்ற வாறே. ” எனத் தலைவன் பொருட்பிரிவு வருதலறிக. அப்பிரிவில் தலைவன் கூற்றுக்குச் செய்யுள் வந்துழிக் கண்டுகொள்க. உடன்போக்கில் வலித்துக் கொண்டு செல்லும் தலைவன், தலைவிக்குச் சுரத்திடைக் கூறுதற்குச் செய்யுள் : “அழிவில முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் நலமென் பணைத்தோள் எய்தின மாகலில், பொரிப்பூம் புன்கின் எழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறும் நெடிய வைகி, மணல்காண் டோறும் வண்டல் தைஇ, வருந்தா தேகுமதி, வாலெயிற் றோயே; மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் நறுந்தண் பொழில கானம், குறும்ப லூரயாம் செல்லு மாறே. ” (நற்றிணை. 9) “வருமழை கரந்த வானிற விசும்பின் நுண்டுளி மாறிய உலவை யாங்கட் டால நீழல் அசைவு நீக்கி, அஞ்சுவழி அஞ்சா தசைவழி யசைஇ, வருந்தா தேகுமதி வாலிழைக் குறுமகள்! |