பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை109

தேம்பாய் கூந்தன் மாஅ யோளே. ”

(ஐங். 324)

“வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
 குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
 வளையுடைக் கையள் எம்மொ டுணீஇய
 வருகதில் லம்ம தானே
 அளியளோ அளியளென் நெஞ்சமர்ந் தோளே. ”

(குறு. 56)

இடைச்சுர மருங்கில் தமர்வர, தலைவன் அருளால் மறைதற்குச் செய்யுள் :

“அன்றை யனைய வாகி யின்றுமெங்
 கண்ணுள் போலச் சுழலு மாதோ
 புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ
 வைகுறு மீனின் இணையத் தோன்றிப்
 புறவணி கொண்ட பூநாறு கடத்திடைக்
 கிடினென விடிக்குங் கோற்றொடி மறவர்
 வடிநவில் அம்பின் வினையர் அஞ்சா
 தமரிடை யுறுதர நீக்கிநீர்
 எமரிடை யுறுதர வொளித்த காடே. ”

(நற். 48)

இதில், முன் தலைவன் செய்ததைத் தோழி கொண்டு கூறியதாகக் காண்கின்றோம்.

“வினையமை பாவையி னியலி நுந்தை
 மனைவரை யிறந்து வந்தனை யாயிற்
 தலைநாட் கெதிரிய தண்பெய லெழிலி
 அணிமிகு கானத் தகன்புறம் பரந்த
 கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டு
 நீவிளை யாடுக சிறிதே; யானே
 மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை
 மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
 அமர்வரின் அஞ்சேன், பெயர்க்குவென்;
 நுமர்வரின் மறைகுவென், மாஅ யோளே. ”

எனும் நற்றிணை (362ஆம்) செய்யுளுமது. இதில் தேடிப் பின்வந்த தலைவிதமர்க்கு ஊறு செய்யாது அருளான் ஒளிக்கும் தலைவன்