பக்கம் எண் :

110நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

தானே கூறியதும் அறிக. கற்பொடு புணர்ந்த கௌவைக்குத் தலைவன் கூற்றாகச் செய்யுள் வரின் கண்டுகொள்க.

இனி, இதில் நாளது சின்மை, தாளாண்பக்கம், இன்மையினிளிவு, அன்பினதகலம், எனும் நான்கும் பொருள்தேடத் தூண்டுதலும், அப்பொருட்பிணியை முறையே இளமையதருமை, தகுதியதமைதி, உடைமையது (காதல்) உயர்ச்சி, அகற்சியதருமை எனும் நான்கும் இன்பவிழைவால் தகைப்பதும் கூறப்படுகிறது.

நாளது சின்மை பொருள்தேட வலித்தலும், அப்பொருட்பிணி தகைக்கும் இன்பநுக ரிளமையும், தம்முள் ஒன்றாமைக்குச் செய்யுள்: -

“புணரிற் புணராது பொருளே; பொருள்வயிற்
 பிரியிற் புணராது புணர்வே; ஆயிடைச்
 செல்லினும் செல்லா யாயினும் நல்லதற்
 குரியை வாழியென் னெஞ்சே; பொருளே
 வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
 ஓடுமீன் வழியிற் கெடுவ; யானே
 விழுநீர் வியலகந் தூணி யாக
 எழுமா ணளக்கும் விழுநிதி பெறினும்,
 கனங்குழைக் கமர்த்த சேயரி மழைக்கண்
 அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனென்;
 எனைய வாகுக வாழிய பொருளே. ”

(நற்றிணை. 16)

“வங்காக் கடந்த செங்காற் பேடை
 எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
 குழலிசைக் குரல குறும்பல அகவும்
 குன்றுறு சிறுநெறி அரியவென் னாது
 மறப்பருங் காதலி யொழிய
 இறப்பல் என்பதீண் டின்மைக்கு முடிவே. ”

(குறுந். 151)

எனும் குறுந்தொகைச் செய்யுளுமது.

பொருள், வலிக்கும் நெஞ்சுக்கு அதனொடு பொருந்தா இளமையதருமை தலைவன் கூறற்குச் செய்யுள் :