பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை111

‘பைங்காய் நல்லிட மொரீஇ’ என்னும் நற்றிணைச் செய்யுளில்,

“. . . . . . . . . . . . . . . பாழ்நாட் டத்தம்
இறந்துசெய் பொருளும் இன்பம் தருமெனில்
இளமையிற் சிறந்த வளமையு மில்லை;
இளமை கழிந்த பின்றை வளமை
காமந் தருதலு மின்றே; அதனால்
நில்லாப் பொருட்பிணிச் சேறி,
வல்லே நெஞ்சம் வாய்க்கநின் வினையே. ’

(நற். 126)

எனத் தலைவன் கூறுதல் காண்க. இன்னும்,

‘அருவியார்க்கும்’, எனும் நற்றிணைச் (205) செய்யுளில்

“துன்னருங் கானம் என்னாய் நீயே;
 குவளை யுண்கண் இவளீண் டொழிய
 ஆள்வினைக் ககறி யாயின், இன்றொடு
 போயின்று கொல்லோ தானே. . . . . . .
 ஆய்நிறம் புரையுமிவள் மாமைக் கவினே. ”

என வருவதுமது.

“முதிர்ந்தோ ரிளமை ஒழிந்தும் எய்தார்;
 வாழ்நாள் வகையளவு அறிஞரு மில்லை;
 . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
 கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக்
 கழிவதாக கங்குல். ”

(நற். 314)

என்று தலைவன் கூறியதைத் தலைவி எடுத்துக் கூறும் செய்யுளில், இளமையதருமையும் நாளது சின்மையும் தம்முள் ஒன்றாது முரணுதலைக்காண்க.

தாளாண்மையால் பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைவி தகுதி நோக்கித் தலைவன் பிரிவருமை கூறுதற்குச் செய்யுள்:

“வினையே ஆடவர்க் குயிரே, வாணுதல்
 மனையுறை மகளிர்க்க காடவ ருயிரென