பக்கம் எண் :

114நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

என்ற குறுந்தொகைப் (347) பாட்டிலும், அன்பினதகலமும் அகற்சியதருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்குதல் காண்க.

இனி, ஓதற் பிரிவில் கூற்று நிகழ்தற்குச் செய்யுள்:

“பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
 மையற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ?
 தீங்கதிர் மதியேய்க்கும் திருமுகம், அம்முகம்
 பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால்”

என்னும் பாலைக்கலித் (14) தாழிசையில் ‘வாயின்வகுத்த கல்விப்பகுதியின்ஊதியங்கருதிய’ தலைவன் பிரிவருமை காண்க.

“பின்னிய தொடர்நீவிப் பிறர்நாட்டுப் படர்ந்துநீ
 மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ?
 புரியவிழ் நறுநீலம் புரையுண்கண் கலுழ்பானாத்
 திரயுமிழ் நெய்யேபோற் றெண்பனி யுறைக்குங்கால். ”

என்பதால், ‘கையின் வகுத்த கல்விப் பகுதியின் ஊதியங்’ கருதித் தலைவன் பிரிந்தமை அறிக. இப்பிரிவுகளில் தலைவன் கூற்று வந்துழிக் கண்டுகொள்க.

புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தும் தலைவன் கூற்றுக்குச் செய்யுள்:

“நாளும் நாளும் ஆள்வினை யழுங்க
 இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென . . .
 ஒண்பொருட் ககல்வர்நம் காதலர்;
 கண்பனி துடையினித் தோழி! நீயே. ”

(சிற்றெட்டகம்)

“இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
 அசையுட னிருந்தோர்க் கரும்புணர் வின்மென . . .
 வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை
 . . . . . . . . . . . . . . . . . . . . .
 மைசூழ் வெற்பின் மலைபல இறந்து
 செய்பொருட் ககன்றநம் செயிர்தீர் காதலர். ”

(நற். 214)

எனும் நற்றிணைச் செய்யுளடிகளுமது. இச்செய்யுள் தலைவி கூற்றாயினும், இதில், ‘இன்மென’ என்பதனால் தலைவன்