பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை115

கூறியதைத் தலைவி கொண்டு கூறியது என விளங்குதலால், புகழும் மானமும் தலைவன் எடுத்து வற்புறுத்தியதறிக.

“மிகைதணித் தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த
 பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர். . . ”

என்னும் மணிவாசகர் கோவைச் செய்யுளில் தோழி கூற்றால் தலைவன் தூதிடையிட்டுப் பிரிதல் கூறப்படுகின்றது. தூதுபற்றிய பிரிவில் தலைவன் கூற்றுக்குச் செய்யுள் வந்துழிக் காண்க. ‘கொடுமிடனாம்’ எனும் (36ஆம்)கலியில், தூதொடு மறந்தார் கொல்லோ என்பதனால், தூதின் பொருட்டுப் பிரிதற்கரிய தலைவியையும் தலைவன் பிரிந்ததறியப்படும்.

முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி முதலியவற்றில் மண்டிலத்தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பலவிடத்தும் வருதல் காண்க. தன் வேந்தனின் பகைவராய தோன்றல் சான்ற மாற்றாரைப் பொருது வெல்லப் பிரியும் தலைவன் கூற்று வருமாறு:

“பல்லிருங் கூந்தல்! பசப்பு நீவிடின்
 செல்வேந் தில்ல யாமே, செற்றார்
 வெல்கொடி அரண முருக்கிய
 கல்லா யானை வேந்துபகை வெலற்கே. ”

(ஐங். 429)

இனி, பாசறைப் புலம்பல் வருமாறு :

“புகழ்சால் சிறப்பிற் காதலி புலம்பத்
 துறந்துவந் தனையே, அருந்தொழிற் கட்டூர்
 நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை
 உள்ளுதொறுங் கலிழு நெஞ்சம்!
 வல்லே எம்மையும் வரவிழைத் தனையே”

(ஐங். 445)

வினை முற்றிய தலைமகன் பாகனொடு விரும்பிக் கூறுதற்குச் செய்யுள் :

“விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப
 வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம்பெயற்
 காரு மார்கலி தலையின்று; தேரும்