| 116 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
ஓவத் தன்ன கோபச் செந்நிலம் வள்வா யாழி உள்ளுறு புருளக் கடவுக, காண்குவம், பாக!. . . . ” (அகம். 54) காவலுக்குப் பிரிந்த தலைவன் தான் வருவதாய்த் தலைவிக்குத் தூதனுப்பியது: “ஒருகுழை ஒருவன் போல” என்னும் பாலைக்கலியில், “ஒல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி வெல்புகழ் உலகேத்த விருந்துநாட் டுறைபவர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . நம் காதலர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே” (கலி. 25) இனி, பரத்தையினகற்சியில் பரிந்த தலைமகளிடத்துத் தலைவன் இரத்தலும், தெளித்தலும் என இருவகையினும் கூற்று நிகழ்தற்குச் செய்யுள்: ‘ஒரூஉ, கொடியியல் நல்லார்க்கு’ என்னும் மருதக் கலியில், “ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா என்கண் எவனோ தவறு” எனவும், “அதுதக்கது, வேற்றுமை என்கண்ணோ ஓராதி, தீதின்மை தேற்றக்கண் டீயாய் தெளிக்கு” (மருதக்கலி. 88) எனவும் தலைவன் தலைவியிடம் இரந்தும் தெளித்தும் கூறுதலும், “இனித் தேற்றேம்யாம், தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீகூறும் பொய்ச்சூள் அணங்காயின் வேற்றினி யார்மேல் விளியுமோ கூறு. ” (கலி. 88) எனக் கூறித் தலைவி ஊடல் தணிதலும் வந்தமை காண்க. |