| 118 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
| 2. | “உழந்துழந் துண்ணீரறுக விழைந் திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண். ” | | | (குறள். 1177) |
| 3. | “புலப்ப லெனச்சென்றேன், புல்லினேன் நெஞ்சம் கலத்த லுறுவது கண்டு. ” | | | (குறள். 1259) |
| 4. | “மன்ற மராத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉ மென்ப; யாவதும் கொடியோ ரல்லரெங் குன்றுகெழு நாடர்; பசைஇப் பசந்தன்று நுதலே, ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே. ” | | | (குறுந். 87) |
இனி, செவிலி கூற்றுக்குச் செய்யுள் : “முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇ குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே. ” (குறுந். 167) “கானங் கோழி கவர்குரற் சேவல் ஒண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப் புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூ ரோளே மடந்தை; வேறூர் வேந்துவிடு தொழிலொடு செலினும் சேந்துவர லறியாது செம்ம றேரே” (குறு. 242) பாங்கன் கூற்றிற்குச் செய்யுள் : “காமம் காம மென்ப, காமம் அணங்கும் பிணியு மன்றே; முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம், பெருந்தோ ளோயே” (குறுந். 204) இது, தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. “இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்கலாற் றினோ நன்றுமற் றில்ல |