| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 119 |
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. ” (குறுந். 58) இக் குறுந்தொகை (5ஆம்) பாட்டு, கழறிக்கூறிய பாங்கற்குத் தலைவன் மாறிக் கூறுதலாம். ஆயத்தார் கூற்றுக்குச் செய்யுள்: “தாதிற் செய்த தண்பனிப் பாவை காலை வருந்தும் கையா றோம்பென ஓரை ஆயங் கூறக் கேட்டும்” எனக் குறுந்தொகை (48ஆம்) செய்யுளில் ஆயத்தின் கூற்று நிகழ்ந்தமை காண்க. பரத்தையர் கூற்றிற்குச் செய்யுள் : | | | | “கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சில் | | | | பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி | | | | யாமஃ தயர்கஞ் சேறும், தானஃ | | | | தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர் | | | | நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி | | | | முனையான் பெருநிரை போலக் | | | | கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே. ” | (குறுந். 80) | | | “கணைக்கோட்டு வாளை கமஞ்சூன் மாமழை | | | | துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதூஉம் | | | | தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது | | | | தண்பெரும் பவ்வ மணங்குக, தோழி! | | | | மனையோண் மடைமையிற் புரக்கும் | | | | அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே. ” | | | |
எனும் குறுந்தொகை (164ஆம்) செய்யுள் காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. “அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூரன் |