பக்கம் எண் :

120நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

பொற்கோ லவிர்தொடித் தற்கெழு தகுவி
எற்புறங் கூறு மென்ப; தெற்றென
வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன; அவ்வரைக்
கண்பொர மற்றதன் கண்ணவர்
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே. ”

எனுங் குறுந்தொகை (364ஆம்) செய்யுளில் இற்பரத்தை பாங்காயினார் கேட்பக் கூறியது காண்க.

“நகைநன் குடையன் பாண!நும் பெருமகன்
 மிளைவலி சிதையக் களிறுபல பரப்பி
 யரண்பல கடந்த முரண்கொள் தானை
 வழுதி வாழிய பலவெனத் தொழுதீண்டு
 மன்னெயி லுடையோர் போல வஃதியா
 மென்னலும் பரியலோ விலமெனத் தண்ணடைக்
 கலிமா கடைஇ வந்தெஞ் சேரித்
 தாருங் கண்ணியுங் காட்டி யொருமைய
 நெஞ்சங் கொண்டமை விடுமோ வஞ்சக்
 கண்ணுடைச் சிறுகோல் பற்றிக்
 கதம்பெரி துடையள்யா யழுங்கலோ விலளே. ”

எனும் நற்றிணை (150ஆம்) செய்யுளும் பரத்தை கூற்றாகும்.

பாகன் கூற்றிற்குச் செய்யுள் :

“விதையர் கொன் முதையற் பூழி
 யிடுமுறை நிரப்பிய வீரிலை வரகின்
 கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை
 யரலை யங்காட் டிரலையொடு வதியும்
 புறவிற் றம்மநீ நயந்தோ ளூரே.
 எல்லிவிட் டன்று வேந்தெனச் சொல்லுபு
 பரியல்; வாழ்கநின் கண்ணி; காண்வர
 விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா
 வண்பரி தயங்க வெழிஇத் தண்பெயற்
 கான்யாற் றிடுமணற் கரைபிறக் கொழிய
 வெவ்விருந் தயரு மனைவி
 மெல்லிறைப் பணைத்தோட் டுயிலமர் போயே. ”