| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 121 |
பாணன் கூற்றிற்குப் பாட்டு வருமாறு: “நினக்கியாம் பாணரு மல்லே மெமக்கு நீயும் குருசிலை யல்லை மாதோ; நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி ஈரித ழுண்கண் உகுத்த பூசல் கேட்டு மருளா தோயே. ” (ஐங். 480) கீழ்வரும் அயலோர் கூற்று ‘ஊரும் அயலும்’ என்னும் செய்யுளியல் (503ஆம்) சூத்திரத்திற்கு மாறான பிற்கால வழக்காகும். “துறந்ததற் கொண்டு துயரடச் சாஅ யறம் புலந்து பழிக்கு மளைக ணாட்டி! எவ்வ நெஞ்சிற் கேம மாக தந்தன ளோநின் மகளே, வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே” (ஐங். 393) இது, உடன்போய்த் தலைமகள் மீண்டுவந்துழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது. | சூத்திரம் : 42 | | | | நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும். |
கருத்து : இது, ஐந்திணை இயல் விளக்கிய முன் சூத்திரத்தின் அடங்காமல் திணைக்குரிப் பொருளாய் அகத்துறைகளில் வந்துபயில்வனவற்றுள் பிறிதொரு செய்தி கூறுகிறது. பொருள் : நிகழ்ந்தது = தலைமக்கள் பால் முன் நிகழ்ந்த செய்திகள்; நினைத்தற்கு = பின் ஏற்றபெற்றி நினைவுறுதற்கு; ஏதுவுமாகும் = ஏற்புடை ஏதுக்களாதலுமுண்டு. குறிப்பு : இந்நூலார், முன் ‘புணர்தல் பிரிதல்’ என்னும் (14ஆம்) சூத்திரத்தால் திணைக்குரிப்பொருள் ஐந்தையும் சுட்டினார். அவற்றுள் அடங்காமல் திணைக்குரிப் பொருளாகச் சான்றோர் செய்யுளில் ஆட்சி பெறுவன வேறு சிலவும் உளவாதலின் அவற்றை “உரிப் பொரு ளல்லன” எனும் சூத்திரத்தால் சுட்டி, அவற்றுள் கொண்டு தலைக்கழிதல் முதலிய சிலவற்றை இயைபு |