பக்கம் எண் :

128நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

றரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரீஇமெலிந் தொழியப் பந்த ரோடி
ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி
அறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள்;
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே. ”

(நற். 110)

தலைவன் இற்சிறப்பின்பம் பாராட்டற்குச் செய்யுள் :

“விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
 அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும்
 இரண்டுந் தூக்கில் சீர்சா லாவே,
 பூப்போ லுண்கண் பொன்போல் மேனி
 மாண்வரி யாகக் குறுமகள்
 தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே. ”

(குறுந். 101)

இக் குறுந்தொகைப் பாட்டு இல்லற நடத்தும் தலைவன் தான் தன் கற்புயர்காதல் மனைவியாலெய்தும் இற்பேரின்பத்தைப் பாராட்டியது.

இனி, தலைவன் வரவு கூறுவாளைத் தோழி வாழ்த்தற்குச் செய்யுள்:

“அரும்பெற லமிழ்த மார்பத மாகப்
 பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை,
 தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்
 தீம்பழந் தூங்கும் பலவி
 னோங்குமலை நாடனை வருமென் றோளே. ”

(குறு. 83)

அவ்வயலிலாட்டியைத் தலைவி வாழ்த்தற்குச் செய்யுள்:

“அமிழ்த முண்கநம் மயலி லாட்டி,
 பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு
 நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை
 நெல்லி யம்புளி மாந்தி யயலது