பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை129

முள்ளி லம்பணை மூங்கிலிற் றூங்குங்
கழைநிவந் தோங்கிய சோலை
மலைகெழு நாடனை வருமென் றோளே. ”

(குறு. 201)

தலைவி இயற்பட மொழிதற்குச் செய்யுள் :

  “இதுமற் றெவனோ, தோழி! துனியிடை
   இன்னர் என்னு மன்னாக் கிளவி?
   இருமருப் பெருமை யீன்றணிக் காரா
   உழவன் யாத்த குழவியி னகலாது
   பாற்பெய் பைம்பயி ராரு மூரன்
   திருமனைப் பல்கடம் பூண்ட
   பெருமுது பெண்டி ராகிய நமக்கே?”(குறு. 181)
   “நிலத்தினும் பெரிதே, வானினு முயர்ந்தன்று,
   நீரினு மாரள வின்றே, சாரற்
   கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
   பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே. ”(குறுந். 2)

என்பது மியன்மொழிதலாம்.

பரத்தை தலைவி பாங்காயினார் கேட்பக் கூறியதற்குச் செய்யுள்:

“கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்
 பழன வாளை கதூஉ மூரன்,
 எம்மிற் பெருமொழி கூறித், தம்மிற்
 கையுங் காலுந் தூக்கத் தூக்கு
 மாடிப் பாவை போல,
 மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. ”

(குறுந். 8)

“கணைக்கோட்டு வாளை கமஞ்சூன் மடநாகு
 துணர்த்தேன் கொக்கின் தீம்பழங் கதூஉந்
 தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
 தண்பெரும் பௌவ மணங்குக, தோழி!
 மனையோண் மடமையிற் புலக்கும்
 அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே. ”