| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 133 |
உடன் கூறப்பட்டது. திணையுணர்வகையல்லாப் பிற அகப் பகுதிகளிளெல்லாம் ஏனையுவமும் ஒத்த வழக்குரிமை கொள்ளுதலின், அதுவுமிங்கமைய விளக்கப்பட்டது. இனி, உருவகத்தை உள்ளுறை உவமமென மயங்க வைக்கும் நச்சினார்க்கினியர் சிறப்புரை பொருந்தாமையுமறிக. | சூத்திரம் : 49 | | | | காமஞ் சாலா இளமை யோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடு மவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. |
கருத்து : இது, அகத்திணை ஏழனுள் மேல் நடுவணைந் திணைக்குரிய இயல்புகள் கூறியபின், எஞ்சி நின்ற இரண்டில் கைக்கிளை இயல்பை விளக்குகிறது. பொருள் : காமஞ்சாலா இளமையோள் வயின் = காதற் செவ்வி கனியும் பருவம் வராத சிறுமி ஒருத்தியிடம்; ஏமஞ்சாலா இடும்பை எய்தி = ஒரு தலைவன் தனக்கு மருந்து பிறிதில்லாப் பெருந்துயராம் காதனோய் கொண்டு; நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து = பட்டாங்குப் புகழ்தலும் (ஆற்றாமையால்) பழிப்பது போலப் புகழ்தலுமாகிய இருவகையானும் தன்பாலும் அச்சிறுமி பாலும் வீறுபெறத் தக்கன சார்த்தி; சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் = மனமாற்றம் பெறாத வழியும் தன்னுணர்ச்சி தானுரைத்து மகிழ்வது; புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு = பொருந்தி வெளிப்படும் கைக்கிளைத் திணையின் குறிப்பாகும். குறிப்பு : ‘கைக்கிளை’ என்பது ஒருமருங்கு பற்றிய குற்றமற்ற காதலாகும். காமச்செவ்வி அறியாச் சிறுமியிடம் தலைமகனொருவனுக்குத் தன்னலமறந்து ‘அவள்பொருட்டே வாழ்வு’ எனக் கொள்ளும் காதற் பெற்றி தோன்றுங்கால், அது கைக்கிளை எனப்படும். காதலுணரும் பருவமுற்றால் தன்னைக்காதலியாத வழி தான் அவளைக் காதலிப்பதை, |