பக்கம் எண் :

134நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

ஆடவனுக்கு ‘நோந்திறப்’ பெருந்திணையாகக் கொள்வதல்லது செந்திறக்காதல் வகையாகப் பாராட்டுதல் பழந்தமிழ் மரபன்று. பருவமன்மையால் தன்னைக் காதலிக்க ஒல்லாத சிறுமியாயினும், அவள் தன்காதலுக்கு உரியளாதலின் காதலன் எனைத்து வகையானும் அவள் நலம் பேணுவதும், தன் புரைதீர் காதலால் தன்னொடும் அவளொடும் ‘கொள்ளாத கூறாமல்’ பெருமை பேணும் பெற்றியனவே சார்த்திக் கூற்று நிகழ்த்துவதும், தனக்கு அவள்தந்த காதல் நோய்க்கு “அணியிழை (காமஞ்சாலாமையின்) தானே மருந்தாக” வொல்லாமையால் அவன் இடும்பைக்கு ஏமம் பெறானாயினும், தன் காதலுணர்ந்து அவள் அதற்கேற்ற பெற்றி மறுமாற்றம் கூறவொண்ணாளாயினும், அவள்பால் தன்னுணர்வுரைத்து மகிழ்வதும், குற்றமற்ற கைக்கிளையின் குறிகளாகும் என்பது இச்சூத்திரத்தில் வற்புறுத்தப்படுகிறது.

அத்தகைய கைக்கிளையும் ஆடவர்க்கே அமைவதன்றி மகளிர்க்குக் கூறுவது மரபன்று. மகளிர்பால் ஒருதலைக் காம வெளிப்பாடு அவர்தம் பெண்ணீர்மைக்குப் பொருந்திய பொற்புடை நெறியாகாமையின், அதனைக் கைக்கிளையின் பாற்படுத்தாமல் பெருந்திணையில் அடக்குவதே புலனெறி வழக்கில் பண்டையோர் கொண்ட தமிழ் மரபாம்.

கைக்கிளைத் தலைவனுக்கும் அவன் காமஞ்சாலாக் காதற் சிறுமிக்கும் வீறுதர வருவனவே அவன் கூற்றாம்; அல்லாதன அவன் வாய்பிறவா, என்பதை வற்புறுத்தற்குத் ‘தருக்கிய புணர்த்து’ என்றுரைக்கப்பட்டது. ‘தருக்கிய சிறை’ எனும் கம்பர் சொற்றொடரும் வீறுதரும் தருக்கின் பெற்றியை வலியுறுத்தல் காண்க.

பண்டைத் தமிழ்ப் புலவர் கொண்ட தூய கைக்கிளையின் பெற்றியும் பெண்மைப் பண்பும் பாராட்டாது, பிற்காலத்தில் பிறர் பெருந்திணையின்பாற்படும் புரைபடுமிழிந்த ஒருதலைக் காமத்தைப் பெண்பாற் கைக்கிளை எனக் கொள்வாரானார். தம் புதுக் கொள்கைக்குத் தொல்காப்பியர் நூலில் இடமின்மை கண்டுவைத்தும், “புல்லித் தோன்றும் கைக்கிளை” எனலால் “புல்லாமல் தோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும்; அது காமஞ்சான்ற தலைமகள்மாட்டு நிகழும்” எனவும், அது களவியலிற் கூறப்படுவது போலவும் பழைய உரைகாரர் கூறுவர். அவரைப் பின்பற்றி நாற்கவிராச நம்பியும் தன்னகப் பொருளில்