| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 135 |
‘காமஞ் சான்ற இளமையோள் வயின்’ என்றே இலக்கணம் வகுத்துக், காமஞ்சாலா இளமையோள்பால் நிகழும் தலைவனின் தூய காதலைப் பாராட்டா தொழிந்தார். காட்சி முதலியவற்றைக் கைக்கிளை எனக் கொள்ளாமல் காமக்குறிப்பாம் ஐந்திணை உரிப்பொருள்களின் பாற்படுத்தித் தொல்காப்பியர் இவ்வகத்திணையியலிலும் களவியலிலும் கூறுதலானும், களவு இருமருங்கொத்த அன்பினைந்திணையின் பாற்பட்டடங்குதலானும், அவற்றின் வேறுபட்ட பெருந்திணையைப் போலவே கைக்கிளையும் அவற்றுள் அடங்காத வேறுதிணையாய்ப் பிரித்துக் கூறப்படுதலானும், களவியலிற் கூறப்படும் எதுவும் அன்பின் ஐந்திணையன்றிக் கைக்கிளைத்திணை ஆகாமை ஒருதலை. இச்சூத்திரத்திற் கூறப்படும் கைக்கிளை குற்றமற்ற பெற்றியதாதலின், பொருந்தாக் காமமாகிய பெருந்திணை போலாது கைக்கிளை பொருந்தும் தூய காதலாம் எனற்கே “புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” என இந்நூலார் விளங்கவைத்தார். (புல்லுதல் = பொருந்துதல், தழுவுதலுமாம். ) “வாருறு வணரைம்பால்” எனும் குறிஞ்சிக் கலியுள், “உளனாஎன் உயிரைஉண் டுயவுநோய் கைம்மிக இளமையா னுணராதாய் நின்தவ றில்லானும் களைநரின் நோய்செயும் கவினறிந் தணிந்துதம் வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்” (1) “நடைமெலிந் தயர்வுறீஇ நாளுமென் நலியுநோய் மடைமையான் உணராதாய் நின்தவ றில்லானும் இடைநில்லா தெய்க்குநின் உருவறிந் தணிந்துதம் உடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்” (2) “அல்லல்கூர்ந் தழிவுற அணங்காகி அடருநோய் சொல்லினு மறியாதாய் நின்தவ றில்லானும் ஒல்லையே உயிர்வவ்வும் உருவறிந் தணிந்துதம் செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய். ” (3) என வந்தமை காண்க. இத்தாழிசைகளுள், (1) தலைவன் தன்னை நலியும் காமநோயை ‘இளமையா னுணராதாய்’, ‘மடமையா னுணராதாய்’, ‘சொல்லினு மறியாதாய்’ எனக் கூறுதலால், அவள் |