பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை193

இது தொல்காப்பியர் தரும் தும்பைத்திணை விளக்கம். எனவே, ‘பிறர் நாட்டின்மேற் செல்லுதலே வஞ்சித்திணை யென்பதும், அப்படி வரும் மாற்றானை எதிர்சென்று மலைதலே தும்பைத்திணை யென்பதும் தமிழர் புறத்திணை மரபுகள்’ என்று தொல்காப்பியர் ஐயமற விளக்கியுள்ளார். இத்தகைய போரறச் சிறப்பு முறையைப் போக்கிப் பொருந்தா ஆரிய முறைகளைப் புகுத்திப் புத்துரை கூற முயன்றதால் வந்த முரண்பாடுகள் இவை.

இன்னும், இத் தும்பைவிளக்கம் வஞ்சியியல்பைத் தெளிப்பதற்கு ஒருவாறு உதவுகின்றது. மேற்செல்லும் வஞ்சி வேந்தனுக்கு வஞ்சித்திணைச் சூத்திரத்தில் அடை எதுவும் சுட்டப்படவில்லை. அதற்கு மாறாக மண்ணசை யுடைமை படையெடுக்கப்படும் வேந்தனுக்கு அடையாகக் குறிக்கப்பட்டது. அடுத்த தும்மைத்திணைச் சூத்திரத்தில் மேல் வந்த வேந்தன் படை எடுப்புக்கு மண்ணசைநோக்கம் சிறிதும் சுட்டப்படாததோடு, படையெடுக்கப்படும் மண்ணசைவேந்தனைப் பொருதடக்கும் வலியுடைமை ஒன்றே தக்க காரணமெனவும் வலியுறுத்தப் படுகின்றது. மண்ணசையால் வந்த வேந்தன் என்னாது, வாளா ’வந்த வேந்தன்’ என முன் கூறியதனோ டமையாது, ‘மைந்து பொருளாக வந்த வேந்தனை’ என்று தும்பைச் சூத்திரம் தெளிப்பதினால், வஞ்சி வேந்தனின் பழுதற்ற போர் நோக்கம், பிறர்மண்ணசையன்று, “அடுத்திருந்து மாணாது செய்வான் பகை, கொடுத்தும் கொளல் வேண்டு”தலின், மண்ணசையுடைய வேந்தன் ஒருவனைப் பொருதடக்கும் வலியேயாம் என்பது விளக்கமாகும். முன்னுரைகாரர் கூறுமாறு மேற்செலவுக்கு மண்ணசையைக் காரணமாக்குவது தொல்காப்பியர் கருத்தாமேல், வஞ்சி்ச் சூத்திரத்தில் மேற்செல்லும் வேந்தனுக்கு மண்ணசை கூறாததோடு, மீண்டும் தும்பைத்திணைச் சூத்திரத்திலும் அவனுக்கு மண்ணசை சுட்டாது ‘மைந்து பொருளாக’ என வேறு ஒரு குறிப்புக் கூறியிராரன்றே. இவ்விரு சூத்திரங்களிலும் தொல்காப்பியர் மேற்செல்லும் வேந்தனுக்கு மண்ணசை நோக்கை விலக்கிப் படையெடுக்கப்படுபவனுக்கே அக்குற்ற முடைமை சுட்டியிருப்பதால் மண்ணசையை மன்னர் போரற நோக்கம் ஆக்குவதை மறுத்து வெறுக்கும் தமிழ் மரபே வலியுறுகிறது.

சூத்திரம் : 8 
 இயங்கு படையரவம், எரிபரந் தெடுத்தல்,
வயங்க லெய்திய பெருமை யானும்,