| 194 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
| | கொடுத்த லெய்திய கொடைமை யானும், அடுத்தூர்ந் தட்ட கொற்றத் தானும், மாராயம் பெற்ற நெடுமொழி யானும், பொருளின் றுய்த்த பேராண் பக்கமும், வருவிசைப் புனலைக் கற்சிறை போல வொருவன் தாங்கிய பெருமை யானும், பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும், வென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும், குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும், அழிபடை தட்டோர் தழிஞ்சி தொகைஇக் கழிபெருஞ் சிறிப்பிற் றுறைபதின் மூன்றெ. |
கருத்து : இது வஞ்சித்திணையின் துறைவகையும் அவற்றின் தொகையும் கூறுகின்றது. பொருள் : இயங்குபடை யரவம் = போர்மேற் செல்லும் தானையின் ஆர்ப்பும்; “உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருநர் ஆர்ப்பொடு முரசெழுந் தொலிப்ப இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக் கொடி யடுக்கத்து நிரயத் தானை. ” சிலப். கால்கோள். 34-37 “ஏற்றுரி போர்த்த வள்வார் இடுமுர சறைந்த பின்னாட் காற்றெரி கடலிற் சங்கு முழவமு முரசு மார்ப்பக் கூற்றுடன் றனைய தானை கொழுநில நெளிய வீண்டிப் பாற்கடற் பரப்பின் வெள்வாட் சுடரொளி பரந்த வன்றே. ” சிந்தா. மண்மகள் இலம். 51 முன் வெட்சித்திணைத் துறையாய்க் குறிக்கப்பட்ட நிரைகவர விரையும் படை யியங்கரவத்தின் வேறாய், போர்மேற் செல்லும் தானையின் ஆரவாரம் இதில் கூறப்பட்டது. வெட்சியிலாகோள் களவில் நிகழ்வதாகலின், ஆர்த்துமேற் செல்வதற்கேற்புடைத்தன்று; அதனா லாங்கு வேந்துவிடு முனைஞரின் கரவியக்கத் தியலரவங் குறிக்கப் படையியங்கரவம் எனப்பட்டது. வஞ்சித்தானை வெளிப்பட விருதுடன் ஆர்த்துப் போர்க்கெழுமாதலின் படை அரவமெனவும், அது போரார்ப்பின் வேறாதலின் “16. 0pt; line-height: >இயங்குபடையரவ மெனவும் விளக்கிய செவ்வி வியத்தற் குரித்து. |