| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 195 |
எரிபரந்தெடுத்தல் = வழியில் பகைப்புலத்தில் தம் செலவைத் தகைக்கும் ஊர்களை நெருப்பிட் டழித்தலும்; “காலென்னக் கடிதுராஅய் நாடுகெட எரி பரப்பி ஆலங்கானத் தஞ்சுவர விறுத் தரசுபட அமருழக்கி. ” மதுரைக் காஞ்சி. 125 - 128 “யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்திறுத்து முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு . . . . . . . . . . . . . . . கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர அழல்கவர் மருங்கின் உருவறக் கெடுத்துத் தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின் . . . . . . . . . . . . . நின் பகைவர் நாடும் கண்டுவந் திசினே. ” பதிற்று. 15 வயங்கல் எய்திய பெருமையானும் = மேற்செல்வோர் வினை விறல்களால் விளங்கிய சிறப்பும்; “நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல் ஈர்ங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன் குடப்பாற் சில்லுறை போலப் படைக்கு நோயெல்லாம் தானா யினனே. ” - புறம் 276 கொடுத்த லெய்திய கொடைமையானும் = தானை மறவர்க்குத் தக்காங்குப் பண்பறிந்து வரிசையின் வழங்கும் கொடைப் பெருமையும்; “. . . . . . . . . . . . . . . ஓடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும் தண்ணடை பெறுதல் யாவது படினே. ” புறம். 287 |