| 196 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
‘இம்மைச் செய்தது’ என்னும் முடமோசியார் புறப்பாட்டு (134)ம் அதுவே. “. . . . . . . . . . . . . . . . கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக் கருங்களிற்று யானைப் புணர்நிரை நீட்டி இருகடல் நீரும் ஒருபகல் ஆடி” பதிற்று, 3ஆம் பத்தின் பதிகம் “. . . . . . . . . . . . . . . . . ஈத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பிற் புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி. ” - பதிற்று. 15 பாணர் முதலிய இரவலர்க்கு வழங்கும் வள்ளன்மை வேறு; இங்குக் குறிக்கப்படுவது போர் வீரருக்கு மன்னர் வரிசை நோக்கி நாடு முதலிய நல்கும் பரிசேயாகும். அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தானும் = எதிர்ப்பாரை முன்னேறிப் பொருதழித்த வெற்றியும்; “ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை. இன்றி னூங்கோ கேளலம்; திரளரை மன்ற வேம்பின் மாச்சினை யொண்தளிர் . . . . . . . . . . . . . . . . . . செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி ஒலியன் மாலையொடு பொலியச் சூடி . . . . . . . . . . . . . . . . . பொருதும் என்று தன்றலை வந்த புனைகழல் எழுவர் நல்வல மடங்க ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே. ” - புறம் 78 “எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒருபகல் எல்லையில் உண்ணும் என்ப தாரிய அரச ரமர்க்களத் தழிய நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன்” - சிலப். கால்கோள். 215-216 |