| 198 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
வரு விசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும் = விரைந்து பெருகி வரும் வெள்ளத்தை அசையாமல் நின்று தடுக்கும் கல்லணை போல, எதிர்த்து மேல்வரும் பகைப்படையை அஞ்சாது ஒருவனாய்த் தனி நின்று தகைக்கும் வீறும்; “வேந்துடைத் தானை முனைகெட நெரிதர ஏந்துவாள் வலத்தன் ஒருவ னாகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற் காழி யனையன். ” - புறம். 330 “வல்லோன் தைஇய வரிப்புனை பாவை முருகு இயன்றன்ன உருவினை யாகி வருபுனற் கற்சிறை கடுப்ப இடையறுத் தொன்னா ரோட்டிய செருப்புகல் மறவர் வாள்வலம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த. ” மதுரைக் காஞ்சி. 723 - 727 பிண்டமேய பெருஞ் சோற்று நிலையும் = திரளைகளாக விரும்பியாங்கு மிக்க சோற்றைத் (தானையர்க்கு) வழங்கும் தகைமையும்; “. . . . . . . . . . . . . . . ஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழற்காற் பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர் உருமுநிலன் அதிர்க்கும் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியும், கடுஞ்சின வேந்தே! நின் தழங்குகுரன் முரசே. ” - பதிற்று. 30 “. . . . . . . . . . . . அரும்படைத் தானை அமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து . . . . . . . . . . . . . . கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன் குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென. ” - சிலப். கால்கோள். வரி 48 - 61 இச் செய்யுள்களுள் முன்னதில் பல்யானைச் செல்கெழு குட்டுவன் தன் ‘செருப்புகன்’மறவர்க்குப் பெருஞ் ‘சோறுகுத்த’ பரிசு கூறப்படுகின்றது. |