பக்கம் எண் :

200நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

1. “வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்
 தேந்து மருப்பி னினவண் டிமிர்பூதுஞ்
 சாந்த மரத்தி னியன்ற வுலக்கையால்
 ஐவன வெண்ணெ லறையுரலுட் பெய்திருவாம்,
 ஐயனை யேத்துவாம் போல வணிபெற்ற
 மைபடு சென்னிப் பயமலை நாடனைத்
 தையலாய் பாடுவா நாம்;
 தகையவர் கைச்செறித்த தாள்பாலக் காந்தண்
 முகையின்மேற் றும்பி யிருக்கும், பகையெனிற்
 கூற்றம் வரினுந் தொலையான், றன்னட்டார்க்குத்
 தோற்றலை நாணாதோன் குன்று;
 . . . . . . . . . . . . . . . .
 எனவாங்கு,
 கூடி யவர்திறம் பாடவென் றோழிக்கு
 வாடிய மென்றோளும் வீங்கின
 ஆடமை வெற்ப னளித்தக்காற் போன்றே. ”
 - கலி. 43
2. “தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர்
ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழித் தடவரைத்தோள் பாடலே பாடல்
பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல். ”

என்பது முதல் மூவரசரையும் வாழ்த்திச் சிலப்பதிகார வாழ்த்துக் காதை யிறுதியில் வரும் வள்ளைப்பாட்டு மூன்றும் இத் துறைத்தாம்.

அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ = பகைவரின் அழிவுதரும் படைக்கலன்களை எதிர்த்து மார்பேற்றுப் புண்கொண்ட மறவரைத் தழுவுதலுடன் கூட்டி;

அழிபடை - வினைத்தொகை; அழிக்கும் படையென விரியும். தட்டுதல், எதிர்த்தல் அல்லது மோதலாகும்; எனவே, தட்டோர் என்பது பகைவர் படைகள் மோதி மார்பு புண்பட்டவர்.

“. . . . . . . . . . மின்னவிர்
ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக்