பக்கம் எண் :

204நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

சூத்திரம் : 11 
 அதுவே தானும் இருநால் வகைத்தே.

கருத்து : இது, உழிஞைத் திணை எட்டு வகைப்படும் என்கின்றது.

பொருள் : வெளிப்படை.

ஏகாரம் ஈற்றசை.

சூத்திரம் : 12 
 கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்,
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்,
தொல்லெயிற் கிவர்தலும், தோலின் பெருக்கமும்,
அகத்தோன் செல்வமும், அன்றி முரணிய
புத்தோன் அணங்கிய பக்கமும், திறப்பட
ஒருதான் மண்டிய குறுமையும், உடன்றோர்
வருபகை பேணார் ஆரெயில் உளப்படச்
சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே.

கருத்து : இது, மேல் நாலிரு வகைத்தே எனத் தொகுத்த உழிஞை வகைகளின் பெயரும் இயல்பும் கூறுகிறது.

பொருள் : 1. கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் = பகைவர் நாட்டைக் கொள்ளத் துணியும் வீறும்;

குறிப்பு : உள்ளின் விரைந்து முடிக்கும் உறுதி பற்றிக் குறித்த கொற்றம் என்றிறந்தகாலத்தாற் கூறப்பட்டது.

1. “. . . . . . . . . . . . . ஒன்னார்
ஆரெயில் அவர்கட் டாகவும், நுமதெனப்
பாண்கட னிறுக்கும் வள்ளியோய்!
பூண்கடன் எந்தைநீ இரவலர் புரவே. ”
- புறம். 203

‘ஆனா ஈகை’ எனத் தொடங்கும் இடைக்காடர் புறப்பாட்டில் கீழ்வரும் அடிகளும் இக்கொற்றம் பற்றியது :