பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை205

2. “மலையி னிழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப் . . .
புலவர் எல்லாம் நின்னோக் கினரே.
நீயே,
மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்று வெகுண்டன்ன முன்பொடு
மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே. ”
 - புறம். 42

2. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் = ‘எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய’ திறலுடைய வேந்தன் சீரும்;

‘ஏற்று வலனுயரிய’ எனும் நக்கீரர் புறப்பாட்டில்,

“கூற்றொத் தீயே மாற்றரும் சீற்றம்,
 வலியொத் தீயே வாலி யோனைப்,
 புகழொத் தீயே இகழுநர் அடுநனை,
 முருகொத் தீயே முன்னியதுமுடித்தலின்,
 ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
 அரியவும் உளவோ நினக்கே . . . ”

- புறம். 56

என இத்துறை வருதல் காண்க. இன்னும் பட்டினப்பாலையில் திருமாவளவனை,

“. . . . . . . . . . . . . . மருங்கற
மலையகழ்க் குவனே, கடல்தூர்க் குவனே,
வான்வீழ்க் குவனே, வளிமாற் றுவனெனத்
தான் முன்னிய துறைபோகலின்”

- பட்டினப்பாலை. வரி: 270 - 273

எனப் பாராட்டுவது மித்துறையாகும்.

3. தொல் லெயிற்கு இவர்தலும் = பகைவர் முன் பற்றாத பழைமையான அரண் மதிலைப் பற்றி முற்றியோர் ஏறுதலும்;

1.“மைந்துடை ஆரெயில் புடைபட வளைஇ
வந்துபுறத் திறுக்கும் பசும்பிசிர் ஒள்ளழல்