| 206 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்பு ஒல்லா மயலொடு பாடிமிழ் புழிதரும் மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறற் றுப்புத்துறை போகிய கொற்ற வேந்தே. . . . ” பதிற்று. 62 | 2. | “பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான் கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப் புலவர் பூண்கட னாற்றிப் பகைவர் கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும் வென்றி யல்லது, வினையுடம் படினும் ஒன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக. ” | | | பெரும்பாண். 448 - 454 |
4. தோலின் பெருக்கமும் = பகைவர் படைக்கலன் உறாவாறு தடுக்கச் செறித்த கோடகங்களின் பொலிவும்; “வினை மாட்சிய விரை புரவியொடு மழை யுருவின தோல் பரப்பி முனை முருங்கத் தலைச் சென்றவர். ” - புறம். 16 5. அகத்தோன் செல்வமும் = (கொளற்கு அரிதாய், உணவு முதலிய கூழும் நன்னீரும் படையும் உலையா தூக்கும் அறைபோகாத் தறுகண் மறவர். காவலும்உடைய) அரண் அகக்காவலன் பரிசு குறித்தலும்; “அளிதோ தானே பாரியது பறம்பே, நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே. ஒன்றே, சிறியிலை வெதிரினெல் விளையும்மே; இரண்டே, தீஞ்சுனைப் பலவின் பழமூழ்க்கும்மே; மூன்றே, கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே; நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன் சொரியும்மே. வான்க ணற்றவன் மலையே; வானத்து மீன்க ணற்றதன் சுனையே; ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும் தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன். ” -புறம். 109 |