பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை207

6.   அன்றி, முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் = அல்லாமலும், முனைந்து அரண் கொள்ள முற்றிய தலைவன் அகத்தவர் எதிர்ப்பால் வருந்தும் பகுதியும்;

அணங்கு = வருத்தம்

“தாக்கற்குப் பேரும் தகர்போல் மதிலகத்து
 ஊக்க முடையார் ஒதுங்கியும் - கார்க்கீண்
 டிடிப்புறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றார்
 அடிபுறத் தீடும் அரிது. ”

- பெரும் பொருள் விளக்கம்

இனி, “முற்றியோன் அகத்தவனை வருத்தும் பரிசும்” எனினுமமையும். முன்னதில் அணங்கு தன்வினை; பின்னதிலது பிறவினை. (முன்னதற்குப், புறத்தோனை அணங்கிய எனக்கொள்ளு தலுமமையும். )

1. “தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று
பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு
வெல்படை வேந்தன் விரும்பாதார் ஊர்முற்றிக்
கொல்படை வீட்டுங் குறிப்பு. ”
 - பெரும் பொருள் விளக்கம்
2. “செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன்
உருமின் இடிமுர சார்ப்ப - அரவுறழ்ந்து
ஆமா உகளும் அணிவரையின் அப்புறம்போய்
வேமால் வயிறெரிய வேந்து. ”
 - முத்தொள்ளாயிரம்

7.   திறப்பட ஒருதான் மண்டிய குறுமையும் = ஊறஞ்சாது உரனுடன் ஒருவனாய் எதிர்த்தேறிப் புரியும் குறும்போரும்; (ஊற்றத்தால் தனித் தேறி மாற்றலரை நெருங்கி மலையும் தறுகண்மை குறுமை அல்லது குற்றுழிஞை எனப்படும். )

“சுதையத் தோங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து
 சிதையத் திண்டிறல் இராவணக் குன்றிடைச் சென்றான்
 ததையச் செங்கரம் பரப்பிய தன்பெருந் தாதை
 உதயக் குன்றினின் றுகுகுன்றிற் பாய்ந்தவன் ஒத்தான். ”