பக்கம் எண் :

208நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

எனும் கம்பர் பாட்டில், சுக்கிரீவன், இராவணன் மேல் தனியே பாய்ந்து மலைந்த குறும்போர் வருதல் காண்க.

8.   உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில் உளப்பட = வெகுண்டு மேல்வரும் உழிஞைப் பொருநரைப் பொருட்படுத்தா உரனுடையார் காவலால் கொளற்கரிதாம் அரணின் பெருமை உள்ளிட்டு;

“மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென
 வையக மறிய வலிதலைக் கொண்ட
 திவ்வழி யென்றி, இயல்தார் மார்ப!
 எவ்வழி யாயினும் அவ்வழித் தோன்றித்
 திண்கூர் எஃகின் வயவர்க் காணில்
 புண்கூர் மெய்யின் உராஅய்ப், பகைவர்
 பைந்தலை எறிந்த மைந்துமலி தடக்கை
 ஆண்டகை மறவர் மலிந்துபிறர்
 தீண்டற் காகாது வேந்துடை யரணே. ”

- தகடூர் யாத்திரை

சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே = முன் சூத்திரத்தில் சுட்டப்பட்ட எட்டு வகைத்தாம் உழிஞைத்திணை.

குறிப்பு : ‘நாலிரு வகைத்தே’ என முன் சூத்திரத்தில் தொகுத்த உழிஞையின் வகை எட்டும் இங்குக் கூறப்படுதலின் ‘சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே’ எனக் குறிக்கப்பட்டன. ஈற்றேகாரம் அசை; இசைநிறை எனினுமமையும். நாலிரு வகைத்தே என்னும் முடிபுக்கேற்ப ‘உழிஞைத் திணை’ என்னும் எழுவாய், கொண்ட பொருள் தொடர்பால் கொள்ளப்பட்டது.

இவை எட்டும், பிறர்கூறுமாறு துறைகளாகா. உழிஞைத்துறை பதின்மூன்றும் அடுத்த சூத்திரம் கூறுதலால் இவ்வெட்டும் உழிஞைத்திணை வகையெனத் தெளிக.

சூத்திரம் : 13 
 குடையும், வாளும் நாள்கோள் அன்றி,
மடையமை ஏணிமிசை மயக்கமும், கடைஇச்
சுற்றமர் ஒழிய வென்று கைக்கொண்டு
முற்றிய முதிர்வும், அன்றி முற்றிய