| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 209 |
| | அகத்தோன் வீழ்ந்த நொச்சியும், மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும், நீர்ச்செரு வீழ்ந்த பாசியும், அதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும், மதின்மிசைக் கிவர்ந்தோர் பக்கமும், இகன்மதிற் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் வென்ற வாளின் மண்ணோ டொன்றத் தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ, வகைநான் மூன்றே துறையென மொழிப. |
கருத்து : உழிஞைத்திணைவகை மேற்கூறி, இதில் அதன் துறைவகை பன்னிரண்டும் குறிக்கப்படுகின்றன. பொருள் : (1, 2) குடையும், வாளும், நாள் கோள் = வேந்தன் கொற்றக் குடையும், வெற்றிப் போர் வாளும், முறையே நன்னாளில் எடுத்துக் கொள்ளுதலும்; “முழுத்தம் ஈங்கிது முன்னிய திசைமேல் எழுச்சிப் பாலை யேகென் றேத்த, மீளா வென்றி வேந்தன் கேட்டு. . . . . . . வாளுங் குடையும் வடதிசைப் பெயர்கென, . . . . . . . . . . . . . . . . பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின் மறமிகு வாளும், மாலைவெண் குடையும், புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப் புரைதீர் வஞ்சிப் போந்தையிற் றொடுப்போன் அரைசுவிளங் கவைய முறையிற் புகுதர. ” - சிலப்பதிகாரம், கால்கோட்காதை அன்றி = அல்லாமலும்; 3. மடையமை ஏணிமிசை மயக்கமும் = தொடையமைந்தஏணிப் படிகளின்மேல் ஏறுவோரும் எதிர்ப்போரும்தம்முள் கலந்து மலைதலும்; (மடை = பூட்டு. ஏணிப் பக்கச்சட்டங்களில் பழுக்கள் பூட்டப்படுதலால், மடையமை ஏணி எனப்பட்டது. ) “பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ ருடன்றெழுந்தா ராகில் - இருவரும் |