பக்கம் எண் :

210நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியவேணி
விண்ணொடு சார்த்தி விடும். ”

- பெரும் பொருள் விளக்கம்.

4.   கடைஇச் சுற்றமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும் = முற்றியோன் தன் மறவரைச் செலுத்தி எதிர்த்தோரை மலைந்து மதிற்புறப் போர் முடிந்து ஒழியுமாறு வென்று எயிலைக் கைப்பற்றி உள்ளேறி அரணக மறவரைச் சூழும் முனைப்பும்;

“ஊர்சூழ் புரிசை உடன்சூழ் படைமாயக்
 கார்சூழ் குன்றன்ன கடைகடந்து - போர்மறவர்
 மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன்
 றாகஞ்சேர் தோள்கொட்டி ஆர்த்து”

- பழம்பாட்டு

5.   முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் = புறத்தோரால் வளைக்கப் பெற்ற அகப்படைத் தலைவன் அரண் காவல் விரும்பிப் புரியும் அமராம் நொச்சியும்;

(வீழ்தல் = விரும்புதல், நொச்சி = மதில்; அது மதிற்காவற்கு ஆகுபெயர்)

“நீரற வறியா நிலமுதற் கலந்த
 கருங்கா னொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
 மெல்லிசை மகளிர் ஐதக லல்குற்
 றொடலை யாகவுங் கண்டனம், இனியே
 வெருவரு குருதியொடு மயங்கி யுருவுகரந்
 தெற்றுவாய்ப் பட்ட தெரியலூ ரன்செத்துப்
 பருந்துண் டுவப்பயாங் கண்டனம்
 மறம்புகன் மைந்தன் மலைந்த மாறே. ”

- புறம். 271

6.   (மற்று) அதன் புறந்தோன் வீழ்ந்த புதுமையும் = அவ்வெதிர்ப்பால் வெகுண்டு புகுந்த புறப்படைத் தலைவன் விரும்பும் புதுக்கோளும்;

(எதிர்ப்பாரை அடர்த்து அவர் நிலையிடத்தைப் புதிதாய்க் கொள்ளுதல் புதுமை எனப்பட்டது. )